“அல்போன்ஸ் புத்திரனை கடுமையாக விளாசிய ரசிகாஸ்”… எதிர்ப்பு தெரிவித்த இயக்குனர்..!!!

பிரித்திவிராஜ் நடிப்பில் இயக்குனர் அல்போன்ஸ் இயக்கத்தில் கடைசியாக வெளியான திரைப்படம் கோல்டு. நீண்ட இடைவெளிக்கு பிறகு வெளியான திரைப்படம் தோல்வியையும் விமர்சனங்களையும் சந்தித்தது. இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் அல்போன்ஸ் தனது புகைப்படத்தை பேஸ்புக்கில் இருந்து நீக்கி இருக்கின்றார். மேலும் தனது சுயவிவர படத்தை மாற்றி எதிர்ப்பு தெரிவித்து இருக்கின்றார்.

மேலும் ஒரு குறிப்பு ஒன்றையும் பகிர்ந்து இருக்கின்றார். அதில் அவர் கூறியுள்ளதாவது, நான் யாருக்கும் அடிமை கிடையாது. தன்னை கேலி செய்யவோ பகிரங்கமாக அவமானப்படுத்தவோ யாருக்கும் உரிமை கொடுக்கவில்லை. எனது படைப்புகளை விரும்பினால் பார்க்கலாம். என் மீது கோபப்பட வேண்டாம். நீங்கள் அவ்வாறு செய்தால் நான் இணையத்தில் கண்ணுக்குத் தெரியாதவனாக இருப்பேன். நான் முன்பு போல் கிடையாது.

நான் முதலில் எனக்கு நேர்மையாக இருப்பேன். பின்னர் என் மனைவிக்கு என் குழந்தைகளுக்கு என்னை உண்மையாக நேசிப்பவர்களுக்கு நேர்மையாக இருப்பேன். நான் விழும்போது என்னுடன் நிற்பவர்களுக்காக நான் நேர்மையாக இருப்பேன். நான் விழுந்த போது உன் முகத்தில் இருந்த புன்னகையை என்னால் மறக்க முடியாது. யாரும் வேண்டுமென்றே விழுவது கிடையாது. இது இயற்கையாக நடப்பதாகும். என்னை வீழ்த்திய அதே இயற்கை என்னை ஆதரவுடன் பாதுகாக்கும். இந்த நாள் இனிதாகட்டும் என தெரிவித்திருக்கின்றார்.

Leave a Reply