கொலை விசாரணையின் போது…. நீதிமன்றத்திற்குள் புகுந்த ஆந்தை…. அலறியடித்து ஓடிய மக்கள்….!!!!

தென் ஆப்பிரிக்கா நாட்டின் பிராக்பான் நகரில் அமைந்துள்ள நீதிமன்றத்தில் கொலை விசாரணை நடைபெற்றுக் கொண்டிருந்தது. அப்போது ஆந்தை ஒன்று கட்டிடத்தின் மேற்கூரையில் உள்ள துளை வழியாக நீதிமன்றத்திற்குள் நுழைந்துள்ளது. முதலில் அனைவரும் இது ஒரு வித்தியாசமான பறவை என நினைத்துக் கொண்டிருந்தனர். இறுதியில் அது ஆந்தை என்பது தெரிய வந்துள்ளது. இதனைக் கண்ட மக்கள் கத்திக்கொண்டு அறையிலிருந்து வெளியேறியுள்ளனர்.

இதனால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனை அடுத்து ஆந்தை மீட்பு மையத்திற்கு உடனடியாக தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த தகவலின் பேரில் ஆந்தை மீட்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சிறிது நேரம் போராட்டத்திற்கு பிறகு ஆந்தையை பத்திரமாக மீட்டுள்ளனர். இதனை தொடர்ந்து பிடிபட்ட ஆந்தையுடன் ஆந்தை மீட்பு குழுவினர் புகைப்படத்தை ஒன்றையும் வெளியிட்டுள்ளனர். அதன் பின் அந்த ஆந்தை வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது.