காற்றாலை மின்சார உற்பத்தியை அதிகரிக்க திட்டம்… நெதர்லாந்து அரசின் முயற்சி…!!!

நெதர்லாந்து அரசு, காலநிலை மாற்றத்தின் விளைவுகளை குறைப்பதற்காக காற்றாலைகளை கடல்களில் உருவாக்க திட்டமிட்டிருக்கிறது.

நெதர்லாந்து அரசு காற்றாலை மின் உற்பத்தியை அதிகரிக்க செய்யும் முயற்சியில்  ஈடுபட்டிருக்கிறது. வரும் 2030-ஆம் வருடத்திற்குள் நெதர்லாந்தில் மின்சார உற்பத்தியானது, இரண்டு மடங்காகும் வகையில் 10.7 ஜிகாவாட் மின்சார உற்பத்தியை உண்டாக்க கடல்களில் காற்றாலைகளை அமைப்பதற்கு திட்டமிடப்பட்டிருக்கிறது.

தற்போதிருக்கும் திட்டங்களானது, கடலோர காற்றாலை மின்சார உற்பத்தியில் வரும் 2030ஆம் வருடத்தில் மொத்தமாக 10 ஜிகாவாட் திறனை நோக்கமாகக் கொண்டிருக்கின்றன. ஏற்கனவே மூன்று ஜிகாவாட் செயல்பாட்டில் இருக்கிறது. இந்நிலையில் ஆற்றல் மாற்றத்திற்கு செலவினங்களை வெகுவாக உயர்த்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மேலும் இதற்காக இந்திய மதிப்பில் 350 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *