நேரு பெயரை வைத்துக்கொள்ள அவமானமா?…. பிரதமர் மோடி கேள்வி…..!!!!!!

சொந்த லாபத்திற்காக நேரு பெயரை பயன்படுத்திக் கொண்டவர்கள் குடும்பப் பெயரில் நேருவின் பெயரை மறந்தது ஏன்? என்று பிரதமர் மோடி கேள்வி எழுப்பினார். இது குறித்து அவர், முன்பு 600-க்கும் மேற்பட்ட அரசு திட்டங்களின் பெயர்கள் காந்தி, நேரு பெயர்களில் இருந்தன.

ஆனால் அவர்களுடைய தலைமுறையைச் சேர்ந்தவர்கள் ஏன் நேருவின் பெயரை குடும்பப் பெயராக வைத்துக்கொள்ளவில்லை என்பது எனக்கு புரியவில்லை. அதில் என்ன அவமானம்? என்று பிரதமர் கேட்டார். காங்கிரஸ் காலத்தில் 600-க்கும் அதிகமான திட்டங்களுக்கு நேருவின் பெயர்தான் சூட்டப்பட்டது. கேரளாவில் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சியமைந்த போது அதை விரும்பாமல் ஆட்சியைக் கலைத்தவர் தான் நேரு எனவும் பிரதமர் சாடினார்.