நானோ, சசிகலாவோ துரோகிகளோடு இணைவதற்கு வாய்ப்பே இல்லை- டிடிவி தினகரன்

நானோ, சசிகலாவோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் நிருபர்களுக்கு  பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது;-பெரியார் குறித்து ரஜினிகாந்த் பேசியது கண்டனத்திற்கு உரியதாகும்.

தமிழர் மக்கள் நலனுக்காக எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி உழைத்த மாபெரும் தலைவர் பெரியார். அவர்  குறித்து ரஜினிகாந்த் அவர்கள்  பேசியிருக்க வேண்டிய அவசியம் இல்லை. பெரிய தலைவர்கள் பற்றி பேசுவதற்கு முன்பு யோசித்து அவர்களின் தியாகம் மற்றும் உண்மை தன்மை ஆராய்ந்து பேசியிருக்கலாம்.

கடவுள் மறுப்பிற்கு எதிரானவர்கள் கூட பெரியாரை மதிப்பவர்கள் தான். தந்தை பெரியார் ஒரு சமூக நீதிக்காகவும், பெண்ணுரிமைக்காகவும் போராடும் போராளி ஆவார். பெரியார் என்பவர் தனி மனிதரல்ல, அவர் ஒரு இயக்கம். ரஜினிகாந்த், தலைவர்களின் வரலாறு தெரியாமல் பேசக்கூடாது.

மேலும், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச் சம்பவங்களைத் தடுக்க காவல்துறை அதிகாரிகள் விரைந்து செயல்பட வேண்டும். சசிகலா சிறையில் இருந்து வெளியில் வர சட்ட ரீதியிலான முயற்சியை மேற்கொண்டு வருகிறோம். அவர் விரைவில் வெளியில் வருவார். மேலும் நானோ, சசிகலாவோ துரோகிகளோடு ஒருபோதும் இணைவதற்கு  வாய்ப்பே இல்லை என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *