“ஜம்மு காஷ்மீர் மாநில நிலைப்பாட்டில் நேரு எடுத்த முடிவு தவறு” அருண் ஜெட்லி குற்றசாட்டு…!!

ஜம்மு காஷ்மீர் மாநில நடவடிக்கைகளில் நேரு எடுத்த  கொள்கைகள் அனைத்தும் தவறானவை என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி குற்றம் சாட்டியுள்ளார்.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் வசிக்கின்ற பிற மாநில மக்கள் நிலம் மற்றும் சொத்துக்கள் அங்கு வாங்க முடியாது. ஏனென்றால் ஜம்மு-காஷ்மீர் அரசு பூர்வகுடி மக்களுக்கு மட்டும் சில சிறப்பு உரிமைகளை , அதிகாரங்களை அரசு வழங்கி உள்ளது. இதனை இந்திய அரசு அரசியலமைப்பு சட்டப்பிரிவு 37_யின் வாயிலாக வழங்கியுள்ளது. அதன்படி ஜம்மு காஷ்மீரில் வசிக்கும் பிற மாநில மக்கள் நிலங்கள் மற்றும் சொத்துக்களை வாங்க முடியாது என்ற கட்டுப்பாடு விதித்துள்ளது .

அருண் ஜெட்லி க்கான பட முடிவு

இந்நிலையில் இது குறித்து மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கருத்து தெரிவித்துள்ளார். அதில் , அவர் அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 37 காஷ்மீர் பொருளாதாரத்தை அதிகம் பாதித்துள்ளது. இதனை ஜவகர்லால் நேரு 1954 ஆம் ஆண்டு அவசர அவசரமாக குடியரசுத் தலைவரின் ஆணையாக அரசியல் சட்டத்தில் இணைத்துவிட்டார். இதை வைத்து அரசு அங்கு வசிக்கும் பிற மாநில மக்களின் உரிமைகளில் தடைவிதிக்கிறது. அதேபோல் ஜம்மு காஷ்மீரில் மாநில பெண்கள் வெளிமாநிலத்தவரை திருமணம் செய்தால் அவர்களுக்கு ஜம்மு காஷ்மீரில் சொத்துக்கள் மற்றும் நிலங்கள் வாங்க முடியாது.

இத்தகைய விதிமுறைகளால் ஜம்மு காஷ்மீரில் முதலீடு சரியாக வரவில்லை. அத்துடன் அங்கு தொழிற்சாலைகள் மற்றும் தனியார் நிறுவனங்களும் அங்கு திறக்கப்படுவதில்லை. ஆகவே ஜம்மு காஷ்மீரில் வேலைவாய்ப்புகள் குறைந்துள்ளது. ஜம்மு காஷ்மீரின் பொருளாதாரம் வீழ்ச்சி அடைந்துள்ளது. மேலும் அங்கு இருக்கும் அரசியல் கட்சிகளும் சரியாக செயல்படவில்லை . ஏனென்றால் அங்கு பிரிவினைவாதிகளின் எண்ணிக்கை இன்னும் குறையவில்லை . அதனால் ஜம்மு காஷ்மீரில் இருக்கும் பிரதான கட்சியான தேசிய மாநாட்டுக் கட்சி மற்றும் ஜம்மு காஷ்மீர் ஜனநாயக கட்சி ஆகியவை மீது மக்களுக்கு நம்பிக்கை குறைந்துள்ளது என குறிப்பிட்டுள்ளார் .