நேரு பெண் பித்தர்… அவரது குடும்பம் பிச்சையை விரும்பும் குடும்பம்… பாஜக எம்.எல்.ஏ பாஜக சர்ச்சை பேச்சு…!!

மறைந்த பிரதமர் ஜவர்கலால் நேரு பெண் பித்து பிடித்தவர் என்று உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த பாஜக எம்எல்ஏ பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

உத்திரபிரதேச மாநிலம் முசாஃபர் நகரில் உள்ள சட்டமன்ற உறுப்பினர் எம்எல்ஏவான சைனி முகநூலில் அண்மையில் உலக நாடுகளின் தலைவர்களுடன் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெளியிட்டிருந்தார். அந்த படத்தில் நார்வே பிரதமர் மோடியை பார்ப்பது போன்ற காட்சியை மேற்கோள்காட்டி பாரதமாதாவை தான் மோடி பார்ப்பார் என்றும் அவர் நேரு அல்ல மோடி என்று பதிவிட்டிருந்தார்.

Related image

இதுகுறித்து பாஜக எம்எல்ஏ சைனியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் தனது பதிவை நியாயப் படுத்திப் பேசினார். ஜவர்கலால் நேரு பெண்பித்தர் அவர் பிரிட்டிஷார் உதவியுடன் நாட்டில் ஆட்சியைப் பிடித்துவிட்டால் அவரது குடும்பமே பிச்சையை விரும்பக்கூடிய குடும்பம்  என்றும் பதிலளித்தார். அவரது இந்த கருத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.