நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் இரத்து…… கலக்கிய திமுக தேர்தல் அறிக்கை….!!

திமுக வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கையில் நீட் , கல்வி மற்றும் விவசாய கடன் ரத்து போன்ற பல்வேறு சிறப்பு அம்சங்கள் இடம்பெற்றுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான மதசார்பற்ற முன்போக்கு கூட்டணி சார்பில் தி.மு.க , கா.ங், இடதுசாரிகள் , ம.தி.மு.க , வி.சி.க , ஐ.ஜே.கே , கொ.ம.தே.க மற்றும் இ.யூ.மு.லீ உள்ளிட்ட கூட்டணி கட்சிகள் போட்டியிடுகின்றது. அனைத்து கட்சிகளும் தங்களின் வேட்பாளரை அறிவித்த நிலையில் இன்று திமுக தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது . அண்ணா அறிவாலயத்தில் உள்ள  கலைஞர் அரங்கத்தில் திமுக தலைவர் முக.ஸ்டாலின் தேர்தல் அறிக்கையை வெளியிட்டார் .

என்ன இருக்கும்

திமுக தேர்தல் அறிக்கையில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்கள் :

தமிழ்நாட்டில் உள்ள மத்திய அரசு அலுவலகங்கள் அனைத்தும் தமிழிலேயே செயல்படத்தக்க வகையில் இணை ஆட்சி மொழியாக தமிழை அங்கீகரிக்க தேவையான சட்டத் திருத்தங்கள் செய்யப்படும்.  

வேளாண் துறைக்கு தனியாக நிதி நிலை அறிக்கை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் .

மத்திய அரசின் வரி வருவாயில் 60 சதவீத  மானியங்கள் பகிர்ந்து அளிக்கப் படவேண்டும்

வளர்ந்த மாநிலங்கள் மேலும் வளர்ச்சி அடைய தேவையான ஊக்கம் கிடைத்திட  மாநிலங்களின் செயல்திறன் அடிப்படையில் பாரபட்சமில்லாமல் நிதிப் பங்கீடு செய்யப்படவேண்டும்.

மத்திய நிதி குழுவின் அமைப்பும் , பணிகளும் மாநிலங்களின் சட்டமன்றத்தால் வரையறுக்கப்பட வேண்டும் .

மத்திய மற்றும் மாநில அரசு அலுவலர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும் . ஓய்வூதியம் குறைந்தபட்சம் ரூபாய் 8000 ஆக நிர்ணயிக்கப்படும் .

பாஜக அரசின் தவறான முடிவுகளால் இன்றைக்கு சிதைந்து போன இந்திய பொருளாதாரத்தை மீட்டெடுக்க சிறப்பு அந்தஸ்துடன் கூடிய பொருளாதார வல்லுனர்கள் அடங்கிய உயர்நிலைக் குழு ஒன்று அமைக்கப்படும் .

தனிநபர் வருமானம் ஆண்டுக்கு ரூபாய்  86 , 689 ரூபாய் இருந்து ரூபாய் 1,50,000_ஆக உயர்த்த நடவடிக்கை எடுக்கப்படும் .

Image result for பெட்ரோல், டீசல் , சமையல் எரிவாயு

நாள்தோறும் நிர்ணயிக்கப்படும் பெட்ரோல்,  டீசல் , சமையல் எரிவாயு உள்ளிட்ட பெட்ரோலிய பொருட்களின் விலைகளை கட்டுக்குள் வைத்து நிர்ணயிக்கப்பட்ட விலை முறை மீண்டும் கொண்டுவரப்படும் .

சமையல் எரிவாயு சிலிண்டருக்கான மானியத்தை வங்கிக் கணக்கில் திரும்ப செலுத்தும் முறை மாற்றப்பட்டு முன்பு இருந்ததுபோல சிலிண்டர் விலை குறைக்கப்படும் .

தென்னிந்திய நதிகளை இணைக்க நடவடிக்கை எடுக்கப்படும் .

1976-இல் மத்திய அரசுக்கு கொண்டு செல்லப்பட்ட கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலுக்குக் கொண்டு வரப்படும் .

மருத்துவக் கல்லூரிகளில் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு களில் மாணவர் சேர்க்கைக்கு நடத்தப்படும் நீட் தேர்வு ரத்து செய்யப்படும் .

Image result for நீட் தேர்வு ரத்து

 

மாணவர்கள் கல்விக் கடன்கள் அனைத்தையும் முழுவதுமாக தள்ளுபடி செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் .

தேசிய நெடுஞ்சாலைகளை பராமரிக்க பத்தாம் வகுப்பு வரை படித்துள்ள 1 கோடி சாலை பணியாளர்  நியமிக்கபடுவார்கள் .

தனியார் நிறுவனங்களிலும் வேலை வாய்ப்புகளில் இட ஒதுக்கீடு முறையை அமல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் .

பத்தாம் வகுப்பு வரை படித்த 50 லட்சம் கிராமப்புற பெண்கள் மக்கள் நலப்பணியாளர்கள் ஆக நியமிக்கப்படுவார்கள் .

கிராமப்பகுதிகளில் வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் கீழ் உள்ள குடும்பத்தில் ஒரு பெண்ணுக்கு சிறு தொழில் தொடங்க ரூபாய் 50,000 வட்டியில்லா கடனாக வழங்கப்படும் .

1964 ஆம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தப்படி இந்தியாவுக்கு திரும்பி அகதிகள் முகாம்களில் உள்ள இலங்கை தமிழர்கள் அனைவருக்கும் தாமதம் இல்லாமல் இந்திய குடியுரிமை வழங்கப்படும் .

நெடுஞ்சாலைகளில் தனியாரின் சுங்கவரி தனியாரின் சுங்கவரி வசூல் உரிமம் முடிந்த பின்னரும்   வசூலிக்கப்படும் சுங்கவரி  கட்டணம் ரத்து செய்யப்படும் .

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு சென்று வரும் மாணவர்களுக்கு அனைவருக்கும் இலவச ரயில் பயணச் சலுகை வழங்கப்படும்.

Image result for மெட்ரோ ரயில் திட்டம்

சென்னைக்கு அடுத்தபடியாக தமிழகத்தில் உள்ள பெரிய நகரங்களான மதுரை , திருச்சி , கோயம்புத்தூர் மற்றும் சேலம் ஆகிய நகரங்களில் மெட்ரோ ரயில் திட்டம் செயல்படுத்தப்படும் .

கீழடி தொல்லியல் ஆய்வுகள் தொடங்கப்படும் அங்கு கிடைத்துள்ள பல்வேறு அருங்கலைப் பொருட்கள் காட்சிப்படுத்தப்பட அங்கேயே அருங்காட்சியகம் ஒன்று அமைக்கப்படும் .

கஜா புயல் , உயிர் நிவாரண உதவிகள் போன்ற கடும் நிவாரண உதவிகளுக்கு  நிதிநிலை அறிக்கையில் 0.5 அரை சதவீதம் நிதி ஒதுக்கீடு செய்யப்படும் .

புயல் பாதிப்புக்குள்ளாகும் அனைத்து பகுதிகளிலும் நிரந்தர பாதுகாப்பு இல்லங்கள் அமைக்கப்படும் , இயற்கை சீற்றத்திலிருந்து கடலோர சமுதாய மக்களை பாதுகாத்திட புதிய சட்டம் செயல்படுத்தப்படும் .

கார்ப்ரேட் நிறுவனங்கள் அனைத்தும் சமுதாய பொறுப்பு சட்டத்தின் கீழ் குறைந்தபட்சம் ரூபாய் 10 ஆயிரம் சம்பளத்தில் வேலை வழங்கும் திட்டத்தில் 50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கப்படும் .

சமூக ஊடகங்கள் பொறுப்பற்ற முறையில் வெளியீடும் ஆபாச செய்திகள் மற்றும் படங்கள் பெருகி வரும் பாலியல் குற்றங்களை தடுக்க புதிய சட்டம் இயற்றப்படும் .

தமிழகத்தின் நெற்களஞ்சியமான காவிரி டெல்டா பகுதிகள் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவிக்கபடும் .

நீர் வளத்தையும் நலத்தையும் பாதிக்கும் வகையில் கொண்டு வரப்பட்ட ஹைட்ரோகார்பன் நியூட்ரினோ மற்றும் மீத்தேன் போன்ற சுற்றுச்சூழலை பாதிக்கக் கூடிய திட்டங்களை கைவிட வலியுறுத்தப்படும் .

தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் விவசாய தொழிலாளர்களுக்கு தேவையான கருவிகள் இலவசமாக வழங்கப்படும் . மேலும் குறைந்தபட்ச வேலை நாட்களில் எண்ணிக்கை 150 ஆக உயர்த்தப்படும் .

வேலையில்லாத் திண்டாட்டத்தைப் போக்க மத்திய மாநில அரசு நிறுவனங்கள் அனைத்திலும் ஐந்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் காலியாக இருக்கக்கூடிய பணியிடங்கள் நிரப்பப்படும் .

கடந்த 11 ஆண்டுகளாக ஏற்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டப் பணிகள் மீண்டும் துவக்கப்பட்டு விரைந்து நிறைவேற்றப்பட உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

இந்தியாவில் உள்ள அனைத்து மதங்களையும்  , மாண்புகளை பாதுகாத்து நல்லுறவு வளர தக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் .

Image result for பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரை

27 ஆண்டுகளுக்கு மேலாக சிறையில் வாடும் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேரையும் மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வலியுறுத்தி நடவடிக்கை எடுக்கப்படும்.

அண்மையில் உயர்த்தப்பட்ட கேபிள் டிவி கட்டணம் குறைக்கப்படும் .

பாலியல் துன்புறுத்தல்  ,குழந்தைகளை பிச்சை எடுக்க வைத்தல் மற்றும்  மனித உறுப்புகள் விற்பனை மற்றும் மனித கடத்தலை தடுக்க சட்டம் கொண்டுவரப்படும் .

தமிழகத்தில் பட்டாசு தொழிலை பாதுகாக்க தேவையான நடவடிக்கைகள் அனைத்தும் மேற்கொள்ளப்படும் .