அப்படி குளிச்சுட்டு போலாமா ? தீர்த்தம் எடுக்கும் போது வீபரீதம்…!!

கரூர் மாவட்டத்தில் ஆற்றில் மூழ்கி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஈரோடு மாவட்டத்திலுள்ள கொடுமுடியில் பிரசித்தி பெற்ற மும்மூர்த்திகள் கோவில் உள்ளது. இங்கு கரூர் மாவட்டத்தின் அருகே காமாட்சிபுரத்தில் உள்ள ஒரு கோவிலுக்கு தீர்த்தம் எடுப்பதற்காக அந்த பகுதியை சேர்ந்த சரவணனின் 17 வயது  மகன் கேசவதிதன் மற்றும் செல்ல முத்துவின் 30 வயது  ராஜ்குமார் உட்பட 12 பேர் காவிரி ஆற்றுக்கு வந்தனர். இந்நிலையில் குளிப்பதற்காக  அவர்கள் அனைவரும் ஆற்றில் இறங்கினர்.

அப்போது கேசவதிதன் எதிர்பாராதவிதமாக ஆற்றின் ஆழமான பகுதிக்குச் சென்றான் .மேலும் அவனுக்கு நீச்சல் தெரியாததால்  நீரில் மூழ்கினான். இதை கண்டதும் அவனை காப்பாற்ற ராஜ்குமார் தண்ணீரில் குதித்துள்ளார். ஆற்றில் ஆழம் அதிகமாக இருந்ததால் 2 பேரும் ஆற்றில் மூழ்கி உயிரிழந்தனர்.  இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து நீரில் மூழ்கி பலியான 2 பேரின் உடல்களையும் மீட்டனர்.