”திணறும் நீட் பயிற்சி மையங்கள்” பெற்றோர்கள் வேதனை …!!

தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நீட் தேர்வுக்கான பயிற்சி வழங்க முடியாமல் 412 இலவச பயிற்சி மையங்கள் திணறி வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது .

தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்பீட் என்ற நிறுவனத்தின் மூலம் நீட் தேர்வு பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டுக்கான  நீட் பயிற்சி மையங்கள் தாமதமாக தொடங்கியதால் இது வரை முப்பதுக்கும் குறைவான வகுப்புகளே நடந்து  இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதனிடையே ஈரோட்டில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செங்கோட்டையன் தேர்தல் மற்றும் தொடர் விடுமுறை காரணமாக நீட் பயிற்சி மையங்கள் இயங்கவில்லை என்று விளக்கமளித்துள்ளார். பயிற்சி மையங்கள் உடனடியாக  தொடங்கப்படும் என்றும்  அறிவித்திருக்கிறார் .தேர்வுக்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில் நீட்  பயிற்சி மையங்கள் செயல்படாததால் அரசு பள்ளி மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக கல்வியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். எனவே பயிற்சி மையங்களை உடனடியாக திறக்க வேண்டுமென்பது அவர்களின் கோரிக்கையாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *