“தமிழகத்தில் நீட் தேர்வு நடந்தே தீரும் “பாஜக அமைச்சர் சர்ச்சசை பேச்சு !!!…

பாஜகவின் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அவர்கள் தமிழகத்தில் நீட் தேர்வு என்பது நடைபெற்ற தீரும் என்று தெரிவித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

ந்தியாவில் மக்களவைத் தேர்தல் ஆனது 7 கட்டங்களாக நடைபெற இருக்கிறது இதனை அடுத்து தமிழகத்தில் வருகின்ற ஏப்ரல் 18ம் தேதியன்று சட்டமன்ற இடைத்தேர்தல் உடன் மக்களவை தேர்தல் நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தரப்பில் அறிவிக்கப்பட்டது இதனையடுத்து தேர்தலில் போட்டியிட உள்ள அரசியல் கட்சிகள் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்

இதனையடுத்து மக்களவை தேர்தளுக்கு பாஜக கட்சிக்கு தமிழக பொறுப்பாளராக  மத்திய மந்திரி பியூஷ் கோயல் தேர்வு செய்யப்பட்டார் .மேலும் மக்களவை தேர்தலின் முதல் கட்ட வாக்குப்பதிவு நேற்றைய தினம் முடிந்த நிலையில், மத்திய மந்திரி பியூஷ் கோயல் பிரச்சாரத்தில் ஈடுபடுவதற்காக மீண்டும் தமிழகம் வந்துள்ளார் மேலும் தேர்தல் குறித்து சில கருத்துக்களை தெரிவித்துள்ளார் அவர் கூறியதாவது ,

தமிழகத்தில் மட்டுமல்லாமல் இந்தியா முழுவதுமே தண்ணீர் பிரச்சனை என்பது இருந்து வருகிறது இந்தப் பிரச்சினையை தீர்ப்பதற்கான ஒரே தீர்வாக நதிகள் இணைப்பு திட்டம் இருக்கும் என்பதை கருத்தில் கொண்டு அதனை செயல்படுத்த முயற்சிகள் மேற்கொண்டு வருகிறோம் ஆனால் காங்கிரஸ் ஆட்சியில் இதற்கான முயற்சிகள் எதுவும் மேற்கொள்ளப்படவில்லை

இத்தகைய அற்புதமான திட்டத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் அவர்கள் வரவேற்பு அளித்து உள்ளார் அவருக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்று பியூஸ் கோயல் தெரிவித்தார் மேலும் இந்தத் தேர்தலில் மோடி ஆட்சி ஆனது வெற்றி பெற்று 2022க்குள் நதிகளை இணைத்து சாதனை படைப்போம் என்று அவர் தெரிவித்தார்

மேலும் அதிமுக சார்பில் தேர்தல் அறிக்கையில் நீட் தேர்வு வேண்டாம் என அவர்கள் குறிப்பிடவில்லை நீட் தேர்வை தமிழில் எழுத அனுமதி தாருங்கள் என்றே அவர்கள் விண்ணப்பித்துள்ளார்கள் இந்த கோரிக்கையை நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று அவர் தெரிவித்துள்ளார்