நீட் ஆள்மாறாட்டம்- மருத்துவ கல்லூரி இயக்குனர் பரபரப்பு பேட்டி…!!

சென்னையை சேர்ந்த உதய் சூர்யா நீட் தேர்வில் ஆள் மாறாட்டம் செய்துள்ளதாக தெரியவந்துள்ளது.

மருத்துவக்கல்லூரி இயக்கம் சார்பில் மருத்துவ கல்லூரி இயக்குனர் நாராயண பாபு  செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் , கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்துள்ளார். அதன் அடிப்படையில் விசாரணை நடைபெற்றது. அதில் நீட் தேர்வை எழுதியவர் புகைப்படமும் , கல்லூரியில் சேர்ந்தவரின் புகைப்படமும் மாறுபட்டு இருந்தது தெரியவந்தது. பின்னர் இதை விசாரிக்க 4 பேர் கொண்ட  உயர்மட்ட குழு விசாரித்து வந்தது.  இதன் அறிக்கையை மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு அனுப்பியுள்ளோம்.

 

பின்னர் சென்னை சேர்ந்த உதித் சூர்யா என்ற மாணவர் முறையை முறைகேட்டில் ஈடுபட்டுள்ளார் என்பது தெரியவந்தது.இதையடுத்து சம்மந்தப்பட்ட மாணவரின் பெற்றோரையும் , மாணவரையும் அழைத்து விசாரித்ததில் நான் கல்லூரியை விட்டு விலகி கொள்கின்றேன் என்று உதய் சூர்யா கடிதம் கொடுத்துள்ளார். தற்போது போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர் என்று தெரிவித்தார்.நீட் தேர்வு எழுதியது உதய் சூர்யா அல்லது வேறு நபரை என உயர் மட்ட குழு விசாரித்து வருகின்றது. மின்னஞ்சலில் வந்த 2 புகைப்படங்களையும் ஒப்பிட்டு பார்க்க முடியவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.