நீட் ஆள்மாறாட்டம் : 3 பிரிவுகளில் வழக்கு…. 7 பேர் கொண்ட தனிப்படை..!!

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் விவகாரத்தில் 2 பேர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு , 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 13_ஆம் தேதி அசோக் என்பவர் தேனி மருத்துவ கல்லூரி டீனுக்கு மின்னஞ்சலில் புகார் அளித்தன் அடிப்படையில் நடைபெற்ற விசாரணையில் சென்னையை சேர்ந்த மருத்துவரின் மகன்  உதய் சூர்யா மஹாராஷ்டிராவில் நீட் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்று , தேனி மருத்துவ கல்லூரியில் படித்து  வந்த நிலையில் அவரின் ஹால் டிக்கெட் மற்றும் கல்லூரி அட்மிஷன் புகைப்படம் சர்சைக்குள்ளாக்கியது.

மேலும் இது தொடர்பாக நடைபெற்ற விசாரணையில் தேர்வு எழுதியவர் புகைப்படம் ஒன்றாகவும் , கல்லூரியில் படிக்கும் உதய் சூர்யாவின் புகைப்படமும் மாறுபட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதைதொடர்ந்து தேனி மருத்துவ கல்லூரி விசாரணைக்குழு நடத்திய விசாரணையில் உதய் சங்கர் மேலும் படிக்க விரும்பவில்லை என்று எழுதி கொடுத்து விட்டு சென்றதாக தெரிகின்றது.

இந்நிலையில் இது தொடர்பான அறிக்கையை மாநில சுகாதாரத்துறை இயக்குநருக்கு தேனி மருத்துவக் கல்லுரி டீன் அனுப்பி இருந்தார்.மேலும் ஆள்மாறாட்டம் செய்தது தொடர்பாக தேனி மருத்துவக் கல்லூரி டீன் போலீஸ் புகார் அளித்திருந்தார். புகாரை ஏற்றுக் கொண்ட கண்டமனுர் விளக்கு காவல்துறை ஆள் மாறாட்டம் செய்தது தொடர்பாக இரண்டு பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளது.

இருவர் மீதும் 419 , 420 ,120B என்ற பிரிவுகளின் கீழ் ஆள்மாற்றட்டம் , போலி ஆவணங்களை தயாரித்தல் , கூட்டுச்சதி ஆகிய வழக்கு பதிவு செய்யப்பட்டு ஆண்டிபட்டியில் காவல் ஆய்வாளர் தலைமையில் 7 பேர் கொண்ட தனிப்படை அமைக்கபட்டுள்ளது. ஆள்மாறாட்டம் தொடர்பாக சம்மந்த பட்ட மாணவன் உதய் சூர்யா_வை போலீஸார் தேடி வருகின்றனர்.