“வங்கி ஊழியர் அடித்து கொலை” குற்றவாளிகள் கைது…!!

தளவாய்புரம் வங்கி ஊழியரை அடித்துக்கொலைசெய்ததற்காக 2 வாலிபர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.

விருதுநகர்  மாவட்டம்ராஜபாளையத்தை  அடுத்துள்ள  அயன்கொல்லங்கொண்டான் சாலையில் உள்ள கிணற்றில் அழுகிய நிலையில் ஒரு ஆண் சடலம் மிதந்ததை  கண்ட பொதுமக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தன சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு  அனுப்பி வைத்தனர்.போலீசாரின் விசாரணையில் இறந்தவர் ராஜபாளையம்மாவட்டம் நக்கனேரி தெருவை சேர்ந்த இசக்கி என்பதும், 34 வயதான இவர் தனியார் வங்கியில் நகைக்கடன் வாங்கி கொடுக்கும் பணியாளரை வேலைப்பார்த்து வந்ததும்  தெரியவந்தது. இறந்தவரின் உடலில் காயங்கள் இருந்ததும் தெரியவந்தது.

போலீசாரின்  தீவிர விசாரணையில் விருதுநகர்  மாவட்டம்  நக்கனேரி தெருவை சேர்ந்த பாலமுருகன்,முனீஸ்வரன் ஆகிய இருவரும் நகைக்கடன் பெற்று தந்ததில் கமி‌ஷன் தொடர்பாக அவர்கள் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் அவ்விருவரும் இசக்கியை அடித்து கொலை செய்து பிணத்தை கிணற்றில் வீசியுள்ளதும் தெரியவந்தது. மேலும்  அவர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்து 2 பேரையும் கைது செய்தனர்.