குறிப்பிட்ட சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் கைது செய்யப்பட்டவரிடம் விசாரணை…!!

பொன்னமராவதியில் குறிப்பிட்ட  சமூகத்தினரை இழிவாக பேசிய விவகாரத்தில் ஒருவரை  பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள பொன்னமராவதியில்  குறிப்பிட்ட ஒரு சமூகத்தினர் பற்றியும் , அந்தச் சமூகத்தின் பெண்கள் பற்றியும் இருவர் தரக்குறைவாக பேசும் ஆடியோ, சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வைரல் ஆகி வந்தது . இழிவாக பேசியவர்களை கண்டித்து சம்மந்தப்பட்ட சமூக மக்கள் பொன்னமராவதியில்  போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து  வெளியாகிய ஆடியோ தொடர்பாகவும் , அதை சமூக வலைதளத்தில் பரப்பியவர் பற்றியும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.  இதில் போலீசார் சந்தேகத்தின் அடிப்படையில்  பட்டமங்கலத்தைச் சேர்ந்த குகன் என்பவரை  கைது செய்து இரகசிய இடத்தில் வைத்து விசாரணை மேற்கொண்டனர்.  இது தொடர்பாக பட்டுக்கோட்டை டி.எஸ்.பி. கணேசமூர்த்தி விசாரித்து வந்த நிலையில் மாரிச்சாமி என்பவனை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.