பிரதீப் ரங்கநாதனுக்கு ஓகே சொன்ன நயன்தாரா.. ஆணவத்தில் ஆடிய சங்கர் மகள்..!!!

தமிழ் சினிமாவில் கோமாளி என்ற படத்தை இயக்கி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றவர் இயக்குனர் பிரதீப் ரங்கநாதன். இத்திரைப்படத்தை அடுத்து அவர் நடித்து இயக்கிய லவ் டுடே திரைப்படம் வெற்றி அடைந்ததை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கும் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இப்படத்தில் பிரதீப்க்கு ஜோடியாக நடிகையும் லேடிஸ் சூப்பர் ஸ்டாருமான நயன்தாரா நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது.

முதலில் பிரதீப் ரங்கநாதனுக்கு ஜோடியாக நடிகையும் இயக்குனர் சங்கரின் மகளுமான அதிதி சங்கரிடம் நடிக்க கேட்டுள்ளனர். ஆனால் அதிதி நடிக்க மறுத்துள்ளதாக சொல்லப்படுகிறது. இதை அடுத்து நயன்தாராவே பிரதீப்புக்கு ஜோடியாக ஒப்புக்கொண்ட நிலையில் ஒரு படம்தான் நடித்து வெளியான அதிதிக்கு இப்படியும் ஒரு ஆணவமா என சினிமா விமர்சகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.