மீண்டும் ரஜினியுடன் ஜோடியாக நயன்தாரா….!!!

முருகதாஸ் இயக்கத்தில் ரஜினிகாந்த்  நடிக்க தயாராகி உள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக  நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர்.

 

தமிழில் ரமணா, கஜினி, துப்பாக்கி, கத்தி, சர்கார் ஆகிய வெற்றி படங்களை எடுத்து தமிழ் திரை உலகில் முன்னணி இயக்குனரான  ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது ரஜினியை வைத்து படம் எடுக்கிறார் இந்த படத்தின் பெயர் நாற்காலி என்றும் சமூகவளைதலங்களில் வெளியாகிவந்தன.  இந்த படத்தின் கதையை   5 மாதங்களுக்கு முன்பே ரஜினியிடம் கூறி ஒப்புதல் பெற்றார்.  தற்போது முருகதாஸ் திரைக்கதையில் பரபரப்பை ஏற்றி திருப்பங்களுடன் மேலும் மெருகூட்டி வந்தார் அந்த பணிகள் தற்போது முடிவடைந்துள்ளது.

தொடர்புடைய படம்

 

இந்த படத்திற்கு கீர்த்தி சுரேஷ் கதாநாயகியாக நடிக்க போவதாக தகவல் வெளியானது.  இந்தி நடிகைகளையும் பரிசீலித்தனர். ஆனால் தற்போது நயன்தாராவை தேர்வு செய்துள்ளனர். ஏற்கனவே சந்திரமுகி படத்தில் இருவரும் ஜோடியாக நடித்தனர். அடுத்த மாதம் (ஏப்ரல்) 10-ந்தேதி மும்பையில் படப்பிடிப்பை தொடங்க உள்ளதாக தெரிவித்தார்.