நாம குறைஞ்சவுங்க இல்ல….. தான்மனம் இருக்கணும்… கொதித்தெழுந்த தியாகராஜன் ….!!

காமராசர் சமாதிக்கு இதுவரை மலர்வளையம் வைத்திருக்கிறாரா மு.க.ஸ்டாலின்? – கராத்தே தியாகராஜன் கேள்வி எழுப்பியுள்ளார்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த கராத்தே தியாகராஜன் கூறுகையில் தென் சென்னையில் இருக்கின்ற அனைத்து நிர்வாகிகளும் காங்கிரஸ் படம் போட்டு, தலைவர் ராகுல் காந்தி , அன்னை சோனியா காந்தி , தலைவர் சிதம்பரம் படத்தை போட்டு தான் நாங்க போஸ்டர் அடிக்கின்றோம்.  எங்களை பொறுத்த வரைக்கும் காங்கிரஸ் கட்சியோட ஆதரவாக இருக்கின்றோம். இன்னைக்கு வந்து காங்கிரஸ் கட்சித் தலைவராக இருக்கும் அழகிரி திமுக ஸ்டாலின் பேச்சை கேட்டு கொண்டு செயல்படுகின்றார்.காங்கிரஸ்காரன் என்னைக்குமே திமுக_விற்கு குறைந்தது இல்லை.

ஸ்டாலின் ஒரு சீனியர் தான் , ஒரு மிகப்பெரிய கட்சியில் இருக்காரு,  ஆனால் தன்மானத்தோடு இருக்கணும்.2006_இல் என்னை கட்சியில் சேர்ப்பதற்கு ஸ்டாலினிடம்  கேட்கணும் , இப்போ என்னை கட்சியில் இருந்து எடுக்கணும் என்றால் ஸ்டாலின் சொல்ல வேண்டும். இப்படி இருக்குறதுக்கு தமிழ்நாட்டில் உள்ள காங்கிரஸ் கட்சியை கலைத்து விட்டு அறிவாலயத்தில் ஒரு மாவட்ட செயலாளர் பதவியை வாங்கிக்கலாம். இது  ரொம்ப கேவலமா இருக்குது.காமராசர் சமாதிக்கு இதுவரை மலர்வளையம் வைத்திருக்கிறாரா மு.க.ஸ்டாலின்? முதலில் மலர் வளையம் வைத்து விட்டு அவர் காங்கிரஸ் சார்பாக ஓட்டு கேட்ட நல்லா இருக்கு என்று காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கபட்ட கராத்தே தியாகராஜன் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *