மக்கும் குப்பைகளிலிருந்து தயாரிக்கப்படும் இயற்கை உரத்தை ஒரு கிலோ ரூபாய் 20 என பொதுமக்களிடம் விற்பதற்கு சென்னை மாநகராட்சி முடிவெடுத்துள்ளது.
சென்னை மாநகராட்சி உட்படுத்தப்பட்ட 15 மண்டலங்களில் இருந்து நாள் ஒன்றுக்கு 4,930 மெட்ரிக் டன் குப்பைகள் சேகரிக்கப்படுகிறது. இதிலிருந்தே நாள் ஒன்றுக்கு மெட்ரிக் டன் மக்கும் குப்பைகள் தெரிந்தெடுக்கப்பட்டு அதிலிருந்து இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதனால் 160 டன் இயற்கை உரத்தை பொதுமக்களுக்கும் மாநகராட்சி பூங்காக்களுக்கும் வழங்கப்பட்டு வந்த நிலையில்,

தற்போது மீதமுள்ள உரங்களையும் இனி தயாரிக்கும் உரங்களையும் பொதுமக்களிடம் விற்பனை செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டு இருக்கிறது. அதன்படி ஒரு கிலோ இயற்கை உரம் 20 ரூபாய் என விலை நிர்ணயிக்கப்பட உள்ளதாக சென்னை மாநகராட்சி ஆணையர் குறிப்பிட்டுள்ளார். கணிசமான அளவில் உரம் வாங்க நினைக்கும்பொதுமக்கள் 9445194802 என்ற எண்ணிற்கு தொடர்பு கொண்டால் வீட்டிற்கே வந்து உரம் வழங்கப்படும் என்று சென்னை மாநகராட்சி ஆணையர் தெரிவித்துள்ளார்.