“தேசிய அறிவியல் தினம்” பிப்ரவரி -28ம் தேதி ஏன் கொண்டாடப்படுகிறது…? காரணம் இதோ…!!

ஏன் தேசிய அறிவியல் நாள் பிப்ரவரி 28ஆம் தேதி கொண்டாடப்படுகிறது என்பதை பற்றி அறிந்து கொள்ளலாம் வாங்க..

நாட்டின் பொருளாதார வளர்ச்சியில் அறிவியல் முக்கிய பங்கு வகிக்கிறது. மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆர்வத்தை அதிகரிக்கும் விதமாக ஆண்டுதோறும் பிப்ரவரி 28ஆம் தேதி தேசிய அறிவியல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அறிவியல் பயன்பாடு விஞ்ஞானிகள், படித்தவர்கள் மட்டுமல்லாமல் சாதாரண மக்களுக்கும் சென்றடைய வேண்டும்.

தேசத்தலைவர்கள், தியாகிகளை கொண்டாடுவதைப் போல அறிவியல் மேதைகளை போற்ற கடந்த 1987 முதல் இந்த தேசிய அறிவியல் தினம் இந்திய அரசால் அறிமுகப்படுத்தப்பட்டது. ஒவ்வொரு நாளும்  அறிவியல் குறிக்கோளை அடிப்படையாக கொண்டு இந்த நாள் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சர் சி வி ராமனின் ராமன் விளைவு கண்டுபிடிக்கப்பட்ட  நாளும் இந்த நாளே ஆகுமாம் . அதனால்தான் இந்த நாள் தேசிய அறிவியல் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1888ஆம் ஆண்டு நவம்பர் ஏழாம் தேதி அன்று திருச்சி அருகே உள்ள திருவானைக்காவலில் பிறந்தார் .

பிரசிடென்சி கல்லூரியில் இயற்பியலில் இளநிலை முதுநிலை பட்டப்படிப்பை முடித்தவர் கொல்கத்தாவில் பல்கலைக்கழகத்தில் பேராசிரியராக இருந்தவர். நீர், காற்று போன்ற உள்ளீடற்ற  ஊடகத்தில் ஒளி ஊடுருவும் போது சிதறல் அடைந்து அதன் அலை நீலமாக மாறுகிறது. அதில் அதிகமாக சிதறும் நீல நிறம் தண்ணீரில் தோன்றுகிறது என்பதை கண்டறிந்தவர் சர் சி வி ராமன். இதற்காக கடந்த 1930 ஆம் ஆண்டு இயற்பியலுக்கான நோபல் பரிசு இவருக்கு வழங்கப்பட்டது.

இந்திய மண்ணில் பிறந்து உலகப் புகழ்பெற்ற பல அரிய கண்டுபிடிப்புகளை ஆராய்ந்து வெளியிட்ட சிறந்த இயற்பியல் மேதை சர் சி வி ராமன் நோபல் பரிசு பெற்ற ஆராய்ச்சியான  ராமன் விளைவு கோட்பாடு முடிவை வெளியிட்ட தினமான பிப்ரவரி 28ஆம் தேதியியே தேசிய அறிவியல் தினமாக அறிவிக்கப்பட்டது. அறிவியலை பரப்புவதற்காக சிறப்பாக செயல்படும் நிறுவனங்கள் மற்றும் அறிவியலார்களுக்கும் தேசிய விருது இந்த நாளில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த அறிவியல் தினம் ஆண்டுதோறும் கொண்டாடப்படுவதற்கான நோக்கம் என்னவென்றால் எந்த ஒரு நாட்டிற்கும் அடிப்படையான அறிவியலின் சிறப்பை இளம் தலைமுறை மாணவர்களுக்கு கூறும் வகையிலும் நாட்டின் அனைத்து பகுதிகளிலும் பல புதிய அறிவியல் சிந்தனைகளை கண்டறிவதும், அதனை தகுந்த முறையில் பயன்படுத்துவதும், பயன்பாட்டிற்கு கொண்டு வரவும் ,  புதிய கண்டுபிடிப்புகளை வரவேற்பதுமே அறிவியல் அறிஞர்களுக்கு நாம் செலுத்தும் உண்மையான நன்றிக்கடன் என்பதை உணரச் செய்வதே இந்த நாளின் நோக்கமாகும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *