நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி பாடல்…. யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை….!!!!!

“வாரிசு” திரைப்படத்தில் நடிகர் சிம்பு பாடிய தீ தளபதி என்ற பாடல் யூடியூபில் 15 மில்லியன் பார்வையாளர்களைக் கடந்து சாதனை படைத்துள்ளது.

இயக்குனர் வம்சி இயக்கத்தில் நடிகர் விஜய் நடிக்கும் திரைப்படம் “வாரிசு”. இந்த திரைப்படம் பொங்கல் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வ அறிவிப்பை அறிவித்துள்ளனர். இந்த “வாரிசு” திரைப்படம் தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் நேரடியாக வெளியாகவுள்ளது.

இந்தத் திரைப்படத்தின் ஹீரோயினியாக நடிகர் ராஷ்மிகா மந்தனா நடித்துள்ளார். மேலும் நடிகர் விஜயுடன் இணைந்து பிரகாஷ் ராஜ், குஷ்பூ, ஷாம், யோகி பாபு மற்றும் சரத்குமார் போன்றவர்கள் பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்று பட குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.

இந்தப் படத்தின் “ரஞ்சிதமே” என்ற பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பு பெற்று பெரியளவில் ஹிட்டாகியுள்ளது. இதனைத் தொடர்ந்து டிசம்பர் 4ஆம் தேதி வெளியான வாரிசு திரைப்படத்தின் இரண்டாவது பாடல் நடிகர் சிம்பு பாடியுள்ளார். இந்த பாடல் செம ஹிட்டாகி ரசிகர்களை கவர்ந்து youtube-ல் 15 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.