நடிகை சோனாலி போகத் மரணம்….. விசாரணையில் வெளியான பல அதிர்ச்சி தகவல்கள்…..!!!!!

ஹரியாணாவைச் சேர்ந்தவர் சோனாலி போகட். இவர் தூர்தர்ஷனில் தொகுப்பாளராக பணியாற்றினார். அதன்பின் டி.வி, வெப் தொடர்களில் நடித்தார். இவர் மாடலாகவும் இருந்தார். கடந்த 2020-ஆம் ஆண்டு பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மிகவும் பிரபலமானார். பாஜகவில் மகளிர் அணி முன்னாள் தேசிய துணைத் தலைவர், தேசிய செயற்குழு உறுப்பினர் உள்ளிட்ட முக்கிய பதவிகளையும் வகித்தார். கடந்த 2019-ஆம் ஆண்டு நடந்த ஹரியாணா தேர்தலில் ஆதம்பூர் தொகுதியில் பாஜக சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.

இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் கோவாவில் உள்ள ஒரு ஹோட்டலில் நடைபெற்ற பார்ட்டியில் மயங்கி விழுந்தார். இதனை அடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். அவரது உடலை பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது அவர் தேகத்தில் பல இடங்களில் பல காயங்களில் இருந்தது தெரிய வந்தது. அவர்  அருந்திய குளிர்பானத்தில் போதை பொருள் அளவுக்கு அதிகமாக கலக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டது. இதனால் இந்த வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வந்துள்ளது.

சிபிஐ தற்போது சோனாலி பேகத்தின் மரணம் குறித்த 1000 பக்கம் கொண்ட குற்றப்பத்திரிகையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளது. அந்த அறிக்கையில் கூறியுள்ளதாவது, “நடிகை சோனாலி வேகத்தின் உதவியாளரும், நண்பரும் சேர்ந்து தண்ணீரில் போதை பொருளை கலந்து கொடுத்ததாக கூறப்பட்டுள்ளது. அதுமட்டுமின்றி சோனாலி பேகத்திற்கு தண்ணீரில் போதை பொருள் கலந்து கொடுத்த சிசிடிவி காட்சிகளையும் நீதிமன்றத்திற்கு ஆதாரமாக சிபிஐ கொடுத்துள்ளது” என்பது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கு குறித்து விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகின்றது.

Leave a Reply