ஐக்கிய நாடுகளின் சபையில் சர்வதேச பனிப்பாறைகள் பாதுகாப்பு கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் ஐ.நாவின் தலைவரான அன்டோனியோ குட்ரெஸ் கூறியதாவது “உலக சராசரி கடல் மட்டம் முந்தைய மூன்று ஆயிரம் ஆண்டுகளில் அதிகரித்ததை விட 1900ஆம் ஆண்டு முதல் வேகமாக உயர்ந்து வருகின்றது. இதனை உலக வானிலை அமைப்பு கூறியுள்ளது. மேலும் காலநிலை மாற்றத்தினால் ஏற்படும் மோசமான தாக்கங்களை தவிர்ப்பதற்கு புவி வெப்பமடைதல் 1.5° க்கு கீழ் குறைக்க வேண்டும்.
அது மட்டுமல்லாமல் நாம் நீர் சுழற்சியை உடைத்ததோடு சுற்றுச்சூழல் இயற்கை அமைப்புகளை அழித்து நிலத்தடி நீரையும் மாசுபடுத்தி விட்டோம். இதனால் இனிமேல் மக்களை பாதுகாக்க அனைத்து நாடுகளும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும்” என அவர் கூறியுள்ளார். இதனை அடுத்து உலக வெப்பமயமாதலினால் வரும் பத்தாண்டுகளில் இமாலய மலைகளில் இருந்து உருவாகும் கங்கை, சிந்து மற்றும் பிரம்மபுத்திரா போன்ற முக்கிய நதிகளின் நீரோட்டம் நிச்சயம் குறையும்” என அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.