மோடி வருகையால் நடராஜா சர்வீஸ்…. மாமல்லபுர நகரத்தில் வாகனங்களுக்கு தடை…. திடீர் நடவடிக்கையால் மக்கள் அதிருப்தி….!!

காஞ்சிபுரம் மாவட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் நுழைய தடை விதிக்கப்பட்டு உள்ளது.

பிரதமர் மோடி மற்றும் சீன அதிபர் ஜி ஜிங்பிங் ஆகியோர் வருகின்ற 12,13 ஆகிய தேதிகளில் காஞ்சிபுர மாவட்டம் மாமல்லபுரத்தில் பேச்சுவார்த்தை நடத்த இருக்கின்றனர். இந்நிலையில் தலைவர்களின் பாதுகாப்பு காரணங்களுக்காக இன்று முதல் மாமல்லபுரம் நகரத்திற்குள்  நான்கு சக்கர வாகனங்கள் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மாமல்லபுர நகரத்திற்குள் இருக்கும் பேருந்து நிலையம் தற்காலிகமாக மாற்றப்பட்டு கிழக்கு கடற்கரை சாலையில் அமைக்கப்பட்ட உள்ளது.

Image result for மாமல்லபுரம் மோடி

மேலும் தொடர்ந்து ஒருவார காலமாக மாமல்லபுரம் நகருக்கு செல்லும் வாகனங்களையும் காவல்துறையினர் கடும் சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். இதை  தொடர்ந்து இன்று காலை முதல் நான்கு சக்கர வாகனங்கள் உள்ளே செல்ல அனுமதி மறுக்கப்பட்டதால் மாமல்லபுரம் செல்லும் பொதுமக்கள் கிழக்கு கடற்கரை சாலையில் இருந்து மாமல்லபுரம் நுழைவுவாயில் வழியாக நடைபயணமாக செல்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *