பிஜேபி-இன் கேவலமான அரசியல் ; IT ரெய்டால் ஆவேசமான ஆர்.எஸ் பாரதி!!

இன்று அமைச்சர் செந்தில் பாலாஜியின் நண்பர்கள், உறவினர்கள்,  நண்பர்களின் நண்பர்கள்,  உறவினர்களின் நண்பர்கள் என 40க்கும் மேற்பட்ட இடங்களில் வருமானவரித்துறையினர் சோதனை நடத்தினர். சோதனை நடைபெற்ற பல இடங்களில் திமுக ஆதரவாளர்கள் – அமைச்சர் செந்தில் பாலாஜியின் ஆதரவாளர்கள் கூடி அதிகாரிகளுக்கு தொந்தரவு செய்ததாக செய்திகள் வெளியானது தமிழக அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தொடர்ந்து ரெய்டு  நடந்து வருவது குறித்து திமுகவின் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தமிழகத்தில் இல்லாத இந்த நேரத்தில் ரெய்டு  செய்வது பாஜகவின் உடைய கேவலமான அரசியலை காட்டுகிறது என்று தெரிவித்தார்.

பாஜகவினர் கர்நாடக தேர்தலில் 2000 நோட்டுக்களை கொடுத்தார்கள். ஒவ்வொரு வாக்காளர்களுக்கும் ஐந்து 2000 ரூபாய் நோட்டுகளை கொடுத்த வீடியோ வந்தது.  பாஜகவினர் அனுமர் பெயரை பயன்படுத்தி பிரச்சாரம் செய்தார்கள். இந்த நாடகத்திற்கு கர்நாடகாவில் காங்கிரஸுக்கு மக்கள் வெற்றியை கொடுத்தார்கள் என் மீது வழக்கு போட்டாலும் பரவாயில்லை நான் சந்திக்க தயார் என பேசினார்.