பி.எம்.நரேந்திரமோடி படத்தை பாராட்டிய காஜலுக்கு பலர் எதிர்ப்பு…!!!!

நடிகை காஜல் அகர்வால் பி.எம்.நரேந்திரமோடி படத்தை வரவேற்று டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அதை பலரும் கண்டித்து வருகின்றனர்.

தேர்தல் சமயத்தில் இந்த படத்தை திரையிட கூடாது என்று காங்கிரஸ் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரித்தனர். தேர்தல் கமிஷனையும், நீதிமன்றத்தையும் அணுகினர் ஆனால் படத்துக்கு தடை விதிக்கவில்லை. இந்த படத்தில் விவேக் ஓபராய் நரேந்திர மோடி வேடத்தில் நடித்துள்ளார். இவர் தமிழில் தல அஜித்துடன் விவேகம் படத்தில் நடித்துள்ளார். இதையடுத்து பி.எம்.நரேந்திரமோடி படம் திரைக்கு வரஇருக்கிறது இதற்க்கு ஆதரவாக இருந்த அனைவருக்கும் விவேக் ஓபராய் தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.

 

பி.எம்.நரேந்திரமோடி பட க்கான பட முடிவு

 

இந்நிலையில் காஜல் அகர்வால் தனது டுவிட்டர் பக்கத்தில் பி.எம்.நரேந்திரமோடி படத்தை பாராட்டி டுவிட் செய்துள்ளார். விவேக் ஓபராயின் தோற்றம் நன்றாக இருக்கிறது. படத்தை பார்க்க ஆவலாக இருக்கிறது. மேலும் படக்குழுவிற்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். கண்டிப்பாக  நரேந்திர மோடி படம் நல்ல வெற்றியை கொடுக்கும் என்று டுவிட் செய்துள்ளார்.

காஜல் அகர்வால்,பி.எம்.நரேந்திரமோடி க்கான பட முடிவு

 

நரேந்திர மோடி படம் குறித்து காஜல் அகர்வால் அளித்த கருத்துக்கு சமூக வலைத்தளங்களில் பலரும் அவரை கண்டித்து வருகின்றனர். நடிகர் உதயநிதி ஸ்டாலின் படங்களில் நடிக்க காஜல் அகர்வாலுக்கு வாய்ப்பு தர கூடாது என்று ஒருவர் வலியுறுத்தியுள்ளார். ஆனால் பா.ஜனதா கட்சியினர் சிலர் காஜல் அகர்வாலை பாராட்டி பதிவிட்டு வருகின்றனர்.