“ஒரே நாடு ஒரே தேர்தல் முறை” குழு அமைப்பதாக மோடி கருத்து ….!!

ஒரே நாடு ஒரே தேர்தல் முறையில் உள்ள சிக்கலை ஆராய்வதற்கு குழு அமைப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

மத்தியில் மீண்டும் ஆட்சி பொறுப்புக்கு வந்த பாஜக தலைமையிலான அரசு நாடாளுமன்றத்துக்கும், மாநில சட்டமன்றத்துக்கும்  ஒரே நேரத்தில் தேர்தல் நடத்த வகை செய்யக்கூடிய  ஒரு நாடு, ஒரே தேர்தல் என்ற திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்து வருகின்றது. இதற்காக அனைத்து கட்சி தலைவர்கள் பங்கேற்றுக்கும் ஆலோசனை கூட்டம் பிரதமர் மோடி  தலைமையில் நடைபெற்றது. இதில் கலந்து கொள்ளாமல்  காங்கிரஸ் , திமுக  உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் இந்த கூட்டத்தை  புறக்கணித்தன.

Image

இதையடுத்து இன்று மாலை நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட இடதுசாரி கட்சிகள் ,  எதிர்க்கட்சி தலைவர்கள் ஒரே நேரத்தில் நாடாளுமன்றதத்துக்கும் ,  சட்டசபைகளுக்கும்  தேர்தல்களை நடத்துவது சாத்தியம் இல்லை.இதில் பல்வேறு நடைமுறை சிக்கல்கள் பல உள்ளன என்று கூறியுள்ளனர். இறுதியாக இந்த திட்டத்தை சாத்தியபடுத்த  ஆராய்வதற்கு ஒரு குழுவை அமைப்பதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.