நண்பர்களுடன் குளிக்க சென்ற போது ….மாணவனுக்கு நடந்த விபரீதம்….சோகத்தில் குடும்பத்தினர்….!!!

நண்பர்களுடன் குளிக்கச் சென்ற பள்ளி மாணவன் குளத்தில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது .

நாகப்பட்டினம் மாவட்டம் நாகை சால்ட் ரோடு பகுதியை சேர்ந்த செல்வமணி என்பவரின் மகன் செல்வராகவன் நாகையில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வந்துள்ளார். இந்நிலையில் சம்பவ தினத்தன்று செல்வராகவன் அவருடைய நண்பர்களுடன் சேர்ந்து  வெளிப்பாளையம் பகுதியில் உள்ள அக்கரை  குளத்தில் குளிப்பதற்காக சென்றுள்ளார். அப்போது நண்பர்களுடன் குளத்தில்  செல்வராகவன் குளித்துக் கொண்டிருந்தபோது ஒரு கரையிலிருந்து மற்றொரு கரைக்கு நீந்தி  சென்றுள்ளார் . அவர் பாதி தூரம் சென்ற பிறகு தொடர்ந்து  நீந்த முடியாததால் குளத்தில் மூழ்கினார் .

இதையடுத்து நண்பர்கள் மற்றும் அங்கிருந்தவர்கள் செல்வராகவனை தேடி உள்ளனர் .ஆனால் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்து தகவலறிந்த நாகை தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் மூழ்கிய செல்வராகவனை தேடினர். ஆனால் நீண்ட நேரத்துக்குப் பிறகு அவர் பிணமாக மீட்கப்பட்டார். இதன்பிறகு உடற்கூறு ஆய்வுக்காக அவரை நாகை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர் .இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த நாகை டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர் இச்சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *