“நான் எங்கேயும் போகல “…. ‘தல தோனியின் பதிலால்’ ….. ரசிகர்கள் செம ஹாப்பி …..!!!

சிஎஸ்கே  அணிக்காக அடுத்த ஆண்டு ஐபிஎல் தொடரில் தோனி விளையாடுவாரா என்பது குறித்து சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்துள்ளது.

14 வது சீசன் ஐபிஎல் தொடரில் நேற்று நடந்த கொல்கத்தா அணிக்கு எதிரான இறுதிப் போட்டி சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அபார வெற்றி பெற்றது .இதன்மூலம் 4-வது முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் அணி ஐபிஎல் கோப்பையை வென்றது .இதில் கடந்த ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில் முதல் அணியாக வெளியேறிய சிஎஸ்கே அணி இந்த ஆண்டு சாம்பியன் பட்டத்தை வென்று அசத்தியுள்ளது .இதனால் சிஎஸ்கே அணி வெற்றியை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர் . இதனிடையே சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்ற எம்.எஸ்.தோனி நடப்பு ஐபிஎல்  சீசனில் கோப்பையுடன் விடைபெற வேண்டும் என ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது . அதோடு 40 வயதை கடந்த எம்.எஸ்.தோனி அடுத்த ஆண்டு நடைபெறும் ஐபிஎல் தொடரில் இடம் பெறுவாரா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே இருந்தது .

இதுகுறித்து  போட்டி முடிந்த பிறகு எம்.எஸ்.தோனி கூறும்போது, ” எல்லாம் பிசிசிஐ -யின் கையில்தான் இருக்கிறது.ஏனெனில் அடுத்த ஐபிஎல் சீசனில் மேலும் 2 புதிய அணிகள் இணைகின்றன .இதனால் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம். சென்னை அணிக்காக விளையாடுவது முக்கியமல்ல .சென்னை அணியில் பெஸ்ட் எப்படி கிடைக்கும் என்பதுதான் சரியான முடிவு. அதோடு அடுத்த 10 ஆண்டுகளுக்கான சென்னை அணி ஒரு ஒரு கோர் டீமை உருவாக்க வேண்டும். தற்போது அது மட்டும்தான் நாங்கள் உற்றுநோக்கும் விஷயமாக உள்ளது என்றார் .மேலும் பேசிய அவர் “நான் இன்னும் சென்னை அணியில்தான் இருக்கிறேன், எங்கும் போகவில்லை” என்று கூறினார். இதனால் அடுத்த ஐபிஎல் சீசனிலும் தோனியை சிஎஸ்கே அணியில் பார்க்கலாம் என்பது உறுதியாகி உள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *