நான் கதையெல்லாம் எழுத மாட்டேன்…. அதத் திருடன் தான் செய்வேன்….. பிரபல இயக்குனர் ராஜமவுலியின் தந்தை அதிரடி ஸ்பீச்….!!!!

இயக்குனர் ராஜமவுலி என் அப்பா கதையை எழுத மாட்டேன், திருடுவேன் என்று கூறியுள்ளார்.

இயக்குனர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆயிரம் கோடிகளுக்கும் அதிகமாக வசூலித்த பாகுபலி மற்றும் ஆர்ஆர் ஆர் போன்ற திரைப்படங்களுக்கு கதை எழுதியவர் ஆவார். இவர் தற்போது கோவாவில் நடைபெறும் 53வது சர்வதேச இந்திய திரைப்பட விழாவின் போது கௌரவிக்கப்பட்டார். இந்த விழாவின்போது விஜயேந்திர பிரசாத் ஒர்க் ஷாப் ஒன்றே நடத்தினார். “த மாஸ்டர்ஸ் ரைட்டிங் பிராசஸ்” என்ற ஒர்க் ஷாப்பில் சினிமா ஆர்வலர்கள் பலர் கலந்து கொண்டுள்ளனர்.

இதில் விஜயேந்திர பிரசாத் கூறியதாவது, ” நான் கதை எழுத மாட்டேன். நம்மை சுற்றியே இருக்கின்ற பல கதைகளை திருடுவேன். ராமாயணம் மகாபாரதம் போன்ற பல நிஜ சம்பவங்கள் நம்மைச் சுற்றி பல கதைகள் இருக்கின்றது. அவற்றை சுவாரஸ்யமான கதையாக எடுத்து எழுதுவேன். நீங்கள் பொய்யான கதையை உண்மை போல சொல்ல வேண்டும் யார் அப்படி சொல்கிறீர்களோ அவர்கள்தான் சிறந்த கதை சொல்பவராவார் நான் கதையை எழுத மாட்டேன். அதை நன்றாக சொல்வேன்” என்று அவர் கூறியுள்ளார்.

Leave a Reply