“நான் இந்த ஸ்கூலோட ஓல்டு ஸ்டுடென்ட் மட்டுமல்ல” ….! “2 பெண் குழந்தைகளுக்கு தகப்பன்”….அஷ்வினின் காட்டமான பதிவு …!!!

சென்னையில் புகழ்பெற்ற பத்மா சேஷாத்ரி பால பவன் தனியார் பள்ளியில்,ஆசிரியராக பணி புரிந்து வந்த ராஜகோபாலன், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்ததால் , கைது செய்யப்பட்டார்.

PSBB பள்ளி ஆசிரியரான ராஜகோபாலன் மாணவிகளுக்கு ஆன்லைனில்  பாடம்  நடத்தும் போது, அரைகுறை ஆடையுடன், பாலியல் ரீதியாக மாணவிகளுக்கு தொந்தரவு கொடுத்துள்ளார். அதோடு மாணவிகளின் செல்போன் நம்பருக்கு ,தகாத முறையில் மெசேஜ்களை அனுப்பி பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்து வந்துள்ளார் . இதுகுறித்து அந்தப் பள்ளி மாணவிகள் அளித்த புகாரின் பேரில், போலீசார் அவரை கைது செய்யப்பட்டு போஸ்கோ சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

இந்த சம்பவத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும்,கடும் கண்டனங்கள்  எழுந்து வருகின்றது . இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான அஷ்வின் தனது ட்விட்டர் பக்கத்தில், இதுகுறித்து காட்டமாக பதிவிட்டுள்ளார். அதில் “இந்தப் பள்ளியின் பழைய மாணவனாக மட்டுமில்லாமல், நான் இரண்டு பெண் குழந்தைகளுக்கு தந்தையாக இருப்பதால் தொந்தரவான  இரவுகளை  கழித்தேன்”, என்று அதில் காட்டமாக தெரிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *