“நமோ டிவி ஒளிபரப்பு நிறுத்தம்” பாஜகவினர் விளக்கம்….!!

பாராளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்த நிலையில் பாஜக_வின் தேர்தல் பிரசாரத்தை வெளியீடு வந்த நமோ தொலைக்காட்சி தனது  ஒளிபரப்பை நிறுத்தியுள்ளது.

பிரதமர் மோடியின் உருவத்தை லோகோவாக கொண்ட நமோ டிவி கடந்த  சில மாதங்களுக்கு முன்பு  தொடங்கப்பட்டு தன்னுடைய  ஒளிபரப்பை  தொடங்கியது. தேர்தல் நெருங்கும் நேரத்தில் இந்த தொலைக்காட்சி தொடங்கப்பட்டதுக்கு பல்வேறு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். இது குறித்து தேர்தல் ஆணையத்திடம் புகாரும் கொடுக்கப்பட்டது. இதில் பிரதமர் மோடியின் பேச்சுக்கள் மற்றும் அரசியல் குறித்த பல்வேறு விஷயங்கள் 24 மணி நேரமும் ஒளிபரப்படட்டது.

இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏப்ரல் 11 முதல் தொடங்கி மே 19 வரை என பாராளுமன்ற தேர்தல் 7 கட்டமாக நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நமோ டிவி_யின் ஒளிபரப்பு சேவையும் நிறுத்தப்பட்டுள்ளது. 7_ஆம் கட்ட வாக்குபதிவின் பிரசாரத்தின் இறுதி நாளான 17_ஆம் தேதி மாலையுடன் இதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து பாஜகவினர் கூறுகையில், தேர்தல் பிரசாரத்துக்காக தொடங்கப்பட்ட நமோ தொலைக்காட்சி தேர்தல் முடிந்து விட்டதால், தேவையில்லை. எனவே கடந்த 17-ஆம் தேதியிலிருந்து அதன் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது என்றார்.