நாளைய(24.05.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

24-05-2020, வைகாசி 11, ஞாயிற்றுக்கிழமை.

இராகு காலம் – மாலை 04.30 – 06.00

எம கண்டம் – பகல் 12.00 – 01.30

குளிகன் –  பிற்பகல் 03.00 – 04.30.

நாளைய ராசிப்பலன் –  24.05.2020

மேஷம்

இன்று பண வரவு சிறப்பாக இருந்தாலும் அதற்கேற்ப செலவுகளும் ஏற்படும். மனைவிவழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். தொழில் முயற்சிகளில் தடைகள் உண்டாகலாம். பொறுமையை கடைபிடிப்பதால் பிரச்சனைகளை தவிர்க்கலாம். நண்பர்களால் மன நிம்மதி உண்டு.

ரிஷபம்

எடுக்கும் முயற்சிகளில் எல்லாம் வெற்றி உண்டாகும். வியாபாரத்தில் கொடுக்கல்-வாங்கல் திருப்திகரமாக இருக்கும். உறவினர்களின் ஆதரவால் இல்லத்தில் மகிழ்ச்சி ஏற்படும். குடும்பத்திலிருந்த பிரச்சினைகள் விலகும். பெண்களின் நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும்.

மிதுனம்

குடும்பத்தில் உள்ளவர்களால் மருத்துவ செலவுகள் உண்டாகலாம். பொருளாதாரம் தொடர்பாக இருந்த பிரச்சனைகள் குறையும். தொழில் வளர்ச்சிக்காக எடுக்கும் முயற்சிகளில் சில தடைகள் ஏற்படலாம். எந்த ஒரு விஷயத்திலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.

கடகம்

இன்று தன்னம்பிக்கை அதிகரிக்கும். உற்றார் உறவினர்களின் அன்பும் ஆதரவும் மகிழ்ச்சியை கொடுக்கும். உடல் ஆரோக்கியம் சீராகும். குடும்பத்தில் பிள்ளைகளுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். புதிய முயற்சிகளில் ஈடுபடுவதில் ஆர்வம் உண்டாகும்.

சிம்மம்

உடன்பிறந்தவர்கள் வளியாக சுபச் செய்திகள் வந்து சேரும். பழைய நண்பர்களின் சந்திப்பு மன மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரத்தில் புதிய நண்பர்கள் இணைவார்கள். பிள்ளைகள் பொறுப்புடன் செயல்படுவார்கள். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன்கள் கிடைக்கும்.

கன்னி

தெய்வ வழிபாடு நிம்மதியை கொடுக்கும். பணவரவு சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஒருசில பாதிப்புகள் உண்டாகலாம். உடன்பிறந்தவர்கள் உதவியாக இருப்பார்கள். வியாபாரத்தில் எதிர்பார்த்த வாய்ப்புகள் கிடைக்கும். சிக்கனமாக செயல்படுவதால் பணப்பற்றாக்குறையை தவிர்க்கலாம்.

துலாம்

உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் வியாபாரத்தில் புதிய முயற்சிகளை செய்யாமலிருப்பது நல்லது. எந்த விஷயத்திலும் கவனம் தேவை. வாகனங்களில் செல்லும் போது கவனமாக செல்லவும். அறிமுகம் இல்லாத நபர்களிடம் தேவையில்லாமல் பேசுவதை தவிர்க்கவும்.

விருச்சிகம்

குடும்பத்தில் செலவுகள் கட்டுப்பாட்டில் இருக்கும். பிள்ளைகளால் சுபச் செய்திகள் வந்து சேரும். குடும்பத் தேவைகள் யாவும் பூர்த்தியாகும். கடன் பிரச்சினைகள் தீரும். பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் விலகும்.

தனுசு

இன்று பணவரவில் இருந்த தடைகள் விலகும். வியாபாரத்தில் அனுகூலமான பலன் கிடைக்கும். புதிய பொருள் சேர்க்கை உண்டு. உடல் ஆரோக்கியத்தில் நல்ல முன்னேற்றம் காணப்படும். திருமண முயற்சிகளில் அனுகூலமான பலன் உண்டு. சகோதர சகோதரிகளின் ஒற்றுமை உண்டாகும்.

மகரம்

பிள்ளைகளால் இன்று வீண் செலவுகள் ஏற்படலாம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வது நல்லது. வீட்டில் பெண்களின் பணிச்சுமை குறையும். உறவினர்களால் குடும்பத்தில் தேவையற்ற பிரச்சனைகள் உண்டாகலாம். பெரியவர்களின் ஆறுதல் வார்த்தைகள் மனதிற்கு மகிழ்ச்சியைக் கொடுக்கும்.

கும்பம்

எந்த ஒரு செயலிலும் ஈடுபாடில்லாமல் செயல்படுவீர்கள். உடன்பிறந்தவர்களால் அனுகூலம் உண்டு. நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். வியாபாரத்தில் வருமானம் சுமாராக இருக்கும். உடல் ஆரோக்கியத்தில் ஒரு சில உபாதைகள் உண்டாகலாம்.

மீனம்

இல்லம் தேடி இன்று இனிய செய்திகள் வரும் நாள். வருமானம் அதிகரிப்பதற்காக வாய்ப்புகள் அமையும். பிள்ளைகளால் சுபச் செலவுகள் உண்டு. தொழில் வளர்ச்சிக்காக புதிய திட்டங்கள் வெற்றியை கொடுக்கும். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *