நாளைய(01.07.2020 ) நாள் எப்படி இருக்கும்…? ராசிபலன் இதோ..!!

01-07-2020, ஆனி 17, புதன்கிழமை.

இராகு காலம் மதியம் 12.00-1.30

எம கண்டம் காலை 07.30-09.00

குளிகன் பகல் 10.30 – 12.00.

நாளைய ராசிப்பலன் –  01.07.2020

மேஷம்

பிள்ளைகளால் சுபச் செலவுகள் உண்டாகும். இல்லம் தேடி இனிய செய்திகள் வந்து சேரும். உடல் ஆரோக்கியம் சிறப்பாகும். உத்தியோகத்தில் எதிர்பார்த்த பதவி உயர்வுகள் கிடைக்கும். புதிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து உதவிகள் தாமதமின்றி கிடைக்கும்.

ரிஷபம்

எந்த ஒரு செயலிலும் மனமகிழ்ச்சியுடன் செயல்படுவீர்கள், பயணங்களால் அனுகூலம் உண்டு. பெற்றோருடன் இருந்த மனஸ்தாபங்கள் நீங்கும். தொழில் வியாபாரத்தில் புதிய நண்பர்கள் இணைவார்கள். குடும்பத்தில் ஒற்றுமை உண்டாகும். நண்பர்கள் மூலம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும்.

மிதுனம்

குடும்பத்தில் மருத்துவச் செலவுகள் உண்டாகலாம். உறவினர்களால் ஓரளவு அனுகூலம் உண்டு. வியாபாரத்தில் இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். எடுக்கும் முயற்சிகள் இடையூறுகள் உண்டாகலாம். எந்த ஒரு செயலிலும் போராடி வெற்றி பெறுவீர்கள்.

கடகம்

உழைப்பிற்கேற்ற பலன் கிடைப்பதில் தாமதம் உண்டாகலாம். சுபகாரிய முயற்சிகளில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். எதிர்பார்க்கும் உதவிகள் உரிய நேரத்தில் கிடைக்கும். தொழில் தொடர்பாக பெரிய முதலீடுகள் செய்யும் காரியங்களில் நிதானம் தேவை.

சிம்மம்

உறவினர்களின் வருகையால் குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். பிள்ளைகள் வழியில் சுப செலவுகள் உண்டாகும். நண்பர்களின் ஆலோசனையால் வியாபாரத்திலிருந்த மந்த நிலை நீங்கி லாபம் அதிகரிக்கும். சிக்கனமாக செயல்படுவதால் கடன் பிரச்சனைகள் நீங்கும்.


கன்னி

பிள்ளைகளுடன் சில மனஸ்தாபங்கள் உண்டாகலாம். வேற்று மொழி நபர்களால் நன்மை உண்டு. வீண் செலவுகளால் கையிருப்பு குறையும். வியாபார வளர்ச்சிக்கு புதிய திட்டங்கள் தீட்டி வெற்றியடைவீர்கள். உடன்பிறந்தவர்கள் வழியில் நற்செய்திகள் கிடைக்கும்.

துலாம்

குடும்பத்தில் இதுவரை இருந்த பிரச்சினைகள் நீங்கும். புதுத் தெம்பும் உற்சாகமும் உண்டாகும். தொழில் தொடர்பாக கொடுக்கல் வாங்கல் திருப்திகரமாக இருக்கும். புதிய பொருட்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் புதிய நபர் அறிமுகம் உண்டாகும்.

விருச்சிகம்

பண வரவிற்கு ஏற்ப செலவுகள் ஏற்படும். சுபகாரியங்கள் கைகூடும். உத்தியோகத்தில் உயர் அதிகாரிகளால் நெருக்கடிகள் உண்டாகலாம். மனைவி வழி உறவினர்கள் மூலம் உதவிகள் கிடைக்கும். எந்த செயலிலும் நிதானத்துடன் செயல்படுவது நல்லது.

தனுசு

தொழிலில் இருந்த பிரச்சினைகள் நீங்கும். சகோதர சகோதரிகளின் வழியாக நற்செய்திகள் வந்து சேரும். திருமண சுப முயற்சிகளில் அனுகூலம் உண்டு. பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்துடன் செயல்படுவார்கள். உத்தியோகம் தொடர்பாக சிலருக்கு வெளியூர் பயணங்கள் செல்லும் வாய்ப்பு உண்டாகும்.

மகரம்

உடல் ஆரோக்கியத்தில் இருந்த பாதிப்புகள் நீங்கும். பணவரவு சிறப்பாக இருக்கும். பொறுமையை கடைபிடிப்பதால் உத்தியோகத்தில் தேவையற்ற பிரச்சனைகளை தவிர்க்கலாம். தொழில் வியாபாரத்தில் ஓரளவு முன்னேற்றம் காணப்படும். உடன்பிறந்தவர்கள் உதவிக்கரம் நீட்டுவார்கள்.

கும்பம்

வரவை விட செலவு அதிகமாக இருக்கும். பூர்வீக சொத்துக்களால் அனுகூலப் பலன் உண்டு. சுபகாரிய பேச்சு வார்த்தைகளில் நிதானமாக செயல்படுவது நன்மையை கொடுக்கும். பெரியவர்களின் நன்மதிப்பைப் பெறுவீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

மீனம்

குடும்பத்தில் உள்ளவர்களுடன் தேவையற்ற கருத்து வேறுபாடுகள் உண்டாகும். உணவு விஷயத்தில் கட்டுப்பாடுடன் இருப்பது நல்லது. உங்கள் ராசிக்கு சந்திராஷ்டமம் இருப்பதால் மற்றவர்கள் பிரச்சினைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. உடல் நிலையில் ஒரு சில பாதிப்புகள் உண்டாகலாம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *