ரத்த வெள்ளத்தில் நிர்வாணமாக கிடந்த சடலம் … அரண்டுபோன வீட்டு காவலாளி ..!!

புதுச்சேரியில் ஒருவர்  ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர் .

புதுச்சேரியில் பாலாஜி நகர் மொட்டைத்தோப்பு பகுதியில் தனியாக வசித்து வருபவர் தத்துவசாமி.  இவரது வீட்டின் கதவு இன்று காலையில் நீண்டநேரம் ஆகியும் திறக்கப்படவில்லை . எனவே சந்தேகமடைந்த  வீட்டின் காவலாளி வீட்டின்  கதவை திறந்து பார்த்துள்ளார் . அப்போது தத்துவசாமி நிர்வாண நிலையில்,

Image result for murder

ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதன்பின் அவர் காவல்நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார் . இதைத்தொடர்ந்து ,  தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர், மோப்பநாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

Image result for murder

இதுகுறித்து வீட்டின் காவலாளியிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் , தத்துவசாமியின் வீட்டிற்கு இரண்டு பேர் வந்ததாகவும், அவர்களுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும் தெரியவந்தது . இதன்பின் , வீட்டிற்கு வந்தவர்கள் யார் என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர் .