“நாங்கள் ஆக்கிரமித்த காஷ்மீரை”…. இந்தியாவால் ஒருபோதும் மீட்க முடியாது…. பாக். அதிரடியில் புதிய ராணுவ தளபதி….!!!!

இந்தியா போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும், பதில் தாக்குதல் நடத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும் என்று பாகிஸ்தானின் புதிய ராணுவ தளபதி தெரிவித்துள்ளார். 

கடந்த மாதம் 24 – ஆம் தேதி பாகிஸ்தான் நாட்டிற்கு புதிய ராணுவ தளபதியாக அசின் முனீர் பொறுப்பேற்றார். இவர் அந்நாட்டின் ராணுவ தளபதியாக பொறுப்பேற்ற பின் பாகிஸ்தான் ஆக்கிரமித்த காஷ்மீர் பகுதிக்கு சென்றுள்ளார். பின்னர் அங்குள்ள ராணுவ வீரர்களை நேரில் சந்தித்து கலந்துரையாடினார்.

அப்போது அசிம் முனீர் கூறியதாவது,  “கில்ஜித் பல்திஸ்தான் மற்றும் ஜம்மு காஷ்மீர் குறித்து இந்தியா தேவை இல்லாத கருத்தை தெரிவித்து வருகின்றது. நம் தாய் நாட்டின் ஒரு அங்குல நிலத்தை கூட இந்திய அபகரிக்க கூடாது. மேலும் இந்தியா நம் மீது போர் தொடுத்தால் அதை எதிர்கொள்ளவும், பதில் தாக்குதல் நடத்தவும் நாம் தயாராக இருக்க வேண்டும்” என்று அவர் கூறியுள்ளார்.