மகிழ்ச்சியின் உச்சத்தில் நாக சைதன்யா…. ஒரே நாளில் ரூ.10,00,00,000…. கொரோனா காலத்தில் இவ்வளவு வசூலா….!!

லவ் ஸ்டோரி படம் வெளியான அன்றே 10 கோடி வசூல் செய்ததால் நாக சைதன்யா மிகுந்த மகிழ்ச்சியில் உள்ளார்

தெலுங்கில் நாக சைதன்யா மற்றும் சாய் பல்லவி இணைந்து நடித்த திரைப்படம் லவ் ஸ்டோரி. சேகர் கம்முலா இயக்கிய இந்தப் படம் 2020 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெளியாக இருந்தது. ஆனால் கொரோனா காரணமாக தள்ளிப் போடப்பட்ட இந்த படம் கடந்த 24ஆம் தேதி திரையரங்கில் வெளியானது. முதல் நாளே திரையரங்குகளில் ரசிகர்களின் கூட்டம் அலைமோதியது.

இந்நிலையில் இந்த திரைப்படம் வெளியான ஒரே நாளில் உலக அளவில் 10 கோடி ரூபாய் வசூல் செய்து அசத்தியுள்ளது. அதோடு கொரோனா காலத்தில் அதிக வசூல் எடுத்த படமாக தனது பெயரை பதித்துள்ளது. ஏற்கனவே சமந்தாவுடன் விவாகரத்து என்று பல செய்திகள் வெளியாகி நாக சைதன்யா வேதனையில் இருந்த நிலையில் அவரது படம் அதிக வசூல் செய்தது அவருக்கு மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் நாக சைதன்யாவிற்கு நல்ல காலம் தொடங்கி விட்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *