விஜய் டிவி பிக்பாஸ் பிரபலம்…. நடித்துள்ள புதிய படம்…. ஜோடியாக ரம்யா நம்பீசன்….!!

 பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான ரியோ ராஜின் திரைப்படமானது விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

விஜய் தொலைக்காட்சியில் சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் அறிமுகமானவர் ரியோ ராஜ். இதனையடுத்து இவர் பிக்பாஸ் சீசன்-4ல் கலந்து கொண்டு அனைவரிடமும் பிரபலமானார். மேலும் இவர் பல படங்களில் நடித்து வந்தார். இந்த நிலையில் Positive Print நிறுவனம் மற்றும்  எல்.சிந்தன் இருவரும் இணைந்து தயாரித்த ‘பிளான் பண்ணி பண்ணனும்’ திரைப்படத்தில் ரியோ ராஜ் நடித்துள்ளார். இதனை  பத்ரி வெங்கடேஷ் இயக்கியுள்ளார். இந்த திரைப்படத்தில் ரியோவுக்கு ஜோடியாக ரம்யா நம்பீசன் நடித்துள்ளார்.

மேலும் படத்தில் பாலசரவணன், ரோபோ சங்கர், தங்கதுரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் நடித்துள்ளனர். குறிப்பாக திரைப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ளார். இதனை தொடர்ந்து ராஜசேகர் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படமானது கடந்த ஏப்ரல் மாதம் வெளியிட இருந்தது. ஆனால் கொரோனா பரவல் காரணமாக ஒத்தி வைக்கப்பட்டது. இந்த நிலையில் திரைப்படமானது வரும் செப்டம்பர் 24-ஆம் தேதியன்று திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.