அண்மையில் கோலிவுட் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்த ‘லவ் டுடே’ படம் வெற்றிகரமாக திரையரங்கில் வெளியாகி, அறிமுக நடிகர் ஒருவரின் படத்திற்கு இந்தளவு வரவேற்பு கிடைத்தது உச்ச நட்சத்திரங்களை ஆச்சரியப்பட வைத்தது. இந்நிலையில் இந்தப்படத்தை இயக்கி நடித்த பிரதீப் ரங்கநாதனுக்கும், நடிகரும் இயக்குனருமான பார்த்திபனுக்கும் இடையே உள்ள பிரச்சனை குறித்து பார்த்திபன் அளித்த பேட்டி, ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேலும் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான ‘கோமாளி’ என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவிற்கு இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன். இந்தப்படம் ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற நிலையில்,’கோமாளி’ படத்தை தொடர்ந்து ‘லவ் டுடே’ படத்தை இயக்கி தானே கதாநாயகனாகவும் நடித்தார். இந்தப்படம் பாக்ஸ் ஆபிஸில் 100 கோடி வரை வசூல் செய்து, சாதனை படைத்து பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் ‘லவ் டுடே’ படத்தின் ஒரு காட்சியில் ‘நல்லா பேசிட்டு இருந்த நீ ஏன் பார்த்திபன் மாதிரி பேசுற’ என ஒரு வசனம் இடம்பெறும். அதாவது பார்த்திபன் மாதிரி புரியாமல் பேசுவதாக கிண்டலாக அந்த காட்சி வைக்கப்பட்டிருந்த நிலையில், இது பற்றி ரசிகர்களுடனான உரையாடலில் பார்த்திபன் பேசியுள்ளார்.
அப்போது இந்த வசனத்தை ஆரம்பத்தில் ரசித்த நான், பிறகுதான் புரிந்தது, இயக்குனர் என்னை கிண்டல் செய்தது. இந்நிலையில் இதற்கு பின்னால் ஒரு கதை உள்ளதாக பார்த்திபன் கூறியுள்ளார். அதாவது பிரதீப் இயக்கத்தில் வெளியான ‘கோமாளி’ படத்தின் கதை, என்னுடைய உதவியாளரின் கதை போல் இருப்பதாக எழுத்தாளர் சங்கத்தில் பிரச்சனை எழுந்தது. அப்போது என்னுடைய உதவியாளருக்கு ஆதரவாக நானிருந்தேன் மற்றும் என்னுடைய உதவியாளருக்கு ஆதரவாக தீர்ப்பும் வந்தது. எனவே அந்த கோபத்தின் ஒரு சிறிய பழிவாங்கலாக இந்த வசனத்தை அவர் வைத்திருக்கலாம் என பார்த்திபன் கூறியுள்ளார்.