திரும்ப வந்துட்டேன்னு சொல்லு! டுவிட்டர் பக்கம் மீட்பு… மீண்டும் அதிரடி காட்ட தயாரான பிரபல நடிகை…!!

இந்தி திரைத்துறையின் பிரபல நடிகையாக வலம் வருபவர் கங்கனா ரனாவத். இவர்  தனது டுவிட்டர் பக்கத்தில், கடந்த ஆண்டு தொடர்ச்சியாக பல சர்ச்சைக்குரிய கருத்துக்களை பதிவிட்டு, குறிப்பாக வெறுக்கத்தக்க நடத்தை கொள்கைகளை  ட்விட்டர் விதிகளை மீறியுள்ளார். அதாவது இந்தி நடிகர்கள் போதை பொருட்களை பயன்படுத்துகின்றனர் என்றும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த 3 குழந்தைகள் பெற்றுக்கொள்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்க வேண்டும் என்றும் டுவிட்டரில் பதிவிட்டிருந்தார்.

மேலும், கடந்த ஆண்டு மேற்குவங்காளத்தில் நடந்த தேர்தலில் மம்தா பானர்ஜி வெற்றிபெற்ற பின், அங்கு நடந்த வன்முறையை பற்றியும் கங்கனா தனது டுவிட்டர் பக்கத்தில் பல்வேறு சர்ச்சைக்குரிய வெறுப்புணர்வை தூண்டும் வகையில்  கருத்துக்களை பதிவிட்டார். எனவே தொடர்ச்சியாக வெறுப்புணர்வை ஏற்படுத்தும் கருத்துகளை தெரிவித்து வந்த காரணத்தாலும், ட்விட்டர் கொள்கை விதிகளை மீறிய காரணத்தாலும் கடந்த ஆண்டு மே மாதம் அவரது டுவிட்டர் கணக்கு முடக்கப்பட்டது.  இந்நிலையில் சுமார் 8 மாதகால தடைகளுக்கு பின் அவரது டுவிட்டர் கணக்கு மீதான தடையை நீக்கி  அந்நிறுவனம் இன்று மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வந்துள்ளது.