நடிகர் ஆர்யாவின் ‘டெடி’… ரிலீஸ் தேதி திடீர் மாற்றம்… புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு…!!!

ஓடிடியில் வெளியாகும் ஆர்யாவின் ‘டெடி’ படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது .

தமிழ் திரையுலகில் நட்சத்திர நாயகனாக வலம் வரும் ஆர்யா நடிப்பில் தயாராகியுள்ள திரைப்படம் ‘டெடி’. இந்தப் படத்தில் கதாநாயகியாக சாயிஷா நடித்துள்ளார் . இயக்குனர் சக்தி சௌந்தர்ராஜன் இயக்கியுள்ள இந்த படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பில் கே.இ.ஞானவேல்ராஜா தயாரித்துள்ளார். மேலும் இந்தப்படத்தில் கருணாகரன், சதீஷ், சாக்ஷி அகர்வால், இயக்குனர் மகிழ்திருமேனி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

 

Arya & Sayyeshaa's Teddy to have an OTT release? | Tamil Movie News - Times  of India

இந்த படத்திற்கு டி இமான் இசையமைத்துள்ளார் . சமீபத்தில் இந்த படம் ஓடிடியில் வருகிற மார்ச் 19-ஆம் தேதி ரிலீஸாகும் என படக்குழு அறிவித்திருந்தது . இந்நிலையில் ‘டெடி’ படத்தின்  ரிலீஸ் தேதியில் திடீர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது . அதன்படி இந்த படம் வருகிற மார்ச் 12ஆம் தேதி ஓடிடியில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *