“ஹேண்ட்சமான ஆளு அவர் தான்”… நடிகை மீனாவின் ஓபன்- டாக்… யார் அந்த நடிகர் தெரியுமா…?

சமீபத்தில் நடிகை மீனா அளித்த பேட்டியில்  நடிகர் அஜித் எப்போதும்  ஹேண்ட்சமானவர் தான்  என்று கூறியுள்ளார்.

தமிழ் சினிமாவில் “தல அஜித்”-க்கு என்றே  தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. நாளுக்கு நாள் அவருக்கென்று இருக்கும் ரசிகர்களின் எண்ணிக்கை உயர்ந்து கொண்டே வருகிறது. மற்றொருபக்கம் தமிழ் சினிமாவில் அவருடன் நடிக்க வேண்டுமென்று பல நடிகைகள் ஏங்கி வருகின்றனர். அவருடன் படத்தில் நடித்த சக நடிகர்கள் மற்றும் நடிகைகள் என அனைவரும் “அல்டிமேட் ஸ்டார் ” அஜித்தை பற்றி பெருமையாகவே பேசுவர்.  இந்நிலையில் சமீபத்தில் 90ஸ் கிட்ஸ்களின் கனவு கன்னி மீனா ஒரு பேட்டியில் கலந்து கொண்டார்.

அப்போது பத்திரிக்கையாளர்கள் அவரிடம் தற்போது நடிக்கும்  நடிகர்களில் ஹேண்ட்சமான ஹீரோ என்றால் நீங்கள் யாரை சொல்லுவீர்கள்? என்று கேட்டுள்ளனர். அதற்கு அவர் தற்போது இருக்கும் நடிகர்களில் ஹேண்ட்சமான ஹீரோ யாரென்று என்று எனக்கு ஞாபகம் வரவில்லை. ஆனால் எப்போதும் எனக்கு ஹேண்ட்சமாக தெரிபவர் என் ஆள் அஜித் தான் என்று கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *