நான் உங்களின் அடிமைக் கிடையாது!… பிடித்தால் மட்டும் என் படங்களை பாருங்கள்!…. விமர்சனங்களுக்கு டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் பதிலடி….!!!!!

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா நாயகியாக நடித்த “கோல்டு” மலையாள படம் சென்ற மாதம் திரைக்கு வந்து தோல்வியடைந்து படக்குழுவினருக்கு அதிர்ச்சியை கொடுத்தது. இதையடுத்து தோல்விக்கு காரணம் டைரக்டர் அல்போன்ஸ் புத்திரன் என விமர்சித்தும் கேலி செய்தும் பலர் வலைத்தளத்தில் பதிவுகள் வெளியிட்டு வந்தனர். இதற்கு பதிலடி கொடுத்து அல்போன்ஸ் புத்திரன் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது “என்னையும், என் கோல்டு திரைப்படத்தையும் தவறாக பேசுகின்றனர். நான் உங்களின் அடிமைக் கிடையாது.

என்னை கேலி செய்யவும், அவமதிக்கவும் உங்களுக்கு உரிமையில்லை. உங்களுக்கு பிடித்தால் மட்டும் என் படங்களை பாருங்கள். கோபத்தை வெளிப்படுத்த என் சமூகவலைத்தள பக்கம் வரவேண்டாம். கீழே விழுந்தாலும் மீண்டும் எழுவதற்கு இயற்கை துணை நிற்கும். தொடர்ந்து இதை செய்து வந்தால் வலைத்தளத்திலிருந்து விலகி விடுவேன்” என காட்டமாக கூறியுள்ளார்.

Leave a Reply