நாம் தமிழருடன் கூட்டணி அமைக்கும் அதிமுக?…. வெளிவரும் தகவல்கள்….!!!!!

முதல் தலைமுறை வாக்காளர்களின் வாக்கு நாம் தமிழர் கட்சிக்கு விழுவதை கணித்திருக்கும் ADMK, சீமானை எப்படியாவது தங்களது கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டும் என முயற்சித்து வருவதாக கூறப்படுகிறது. இதனிடையே அதிமுகவின் முக்கிய புள்ளி ஒருவர் நாம் தமிழர் கட்சியுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் நாம் தமிழர் கட்சி ஓட்டை பிரிந்ததால் தான் அதிமுக தோல்வி அடைந்ததாக கூறப்படுகிறது. 2024 தேர்தலில் ஓபிஎஸ் சசிகலாவுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி அமைத்தால் 2024, 2026 தேர்தலில் வெற்றி பெறலாம் என அதிமுகவினர் நினைக்கிறார்களாம்.