நாளை தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் கிடையாது…!!

மிலாடி நபியை முன்னிட்டு சென்னையில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளும் திறக்கக்கூடாது என்று சென்னை கலெக்டர் அறிவித்துள்ளார்.

இதுகுறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் சீதாலட்சுமி கூறியதாவது மிலாடி நபி தினத்தை முன்னிட்டு சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து மதுபான சில்லரை விற்பனை கடைகள் மற்றும் அதனை சார்ந்த பார்கள், கிளப் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  ஹோட்டல்கள் மற்றும் அதனை சார்ந்த பார்கள்,  எஃப்.எல்11 உரிமம் கொண்ட பார்கள் அனைத்தும் கண்டிப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அன்றைய தினத்தில் மதுபானம் விற்பனை செய்யக்கூடாது என்று அறிவிக்கப்படுகிறது. தவறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *