ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு -வானிலை ஆய்வு மையம்….

தமிழகத்தில்  ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என  வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் , வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, ஒரு சில இடங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாகவும்  ஓரிரு இடங்களில் அனல் காற்று வீசலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது .

thunderstorms-rain க்கான பட முடிவு

கடந்த   24  மணி நேரத்தில் ,வேலூர் மாவட்டம் சோளிங்கரில் 14 சென்டி மீட்டர், திருவள்ளூர் மாவட்டம் ஆர்.கே.பேட்டையில் 7 சென்டி மீட்டர் மற்றும்  திருத்தணியில் 1 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது .