ஓடும் ரயிலில் மர்ம நபர்கள் கைவரிசை… போலீஸ் வலைவீச்சு…!!

கோவை- சேலம் இடையே செல்லும் ரயிலில் பெண்ணிடம் நகையை திருடிச் சென்ற  மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் வசித்து வருபவர் காமராஜ். இவர் கோயமுத்தூரில் உள்ள ஆர்.எஸ்.புரத்தில்  ஒரு பழக்கடைஒன்றில்  கேஷியராக வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி சிவகாமி (வயது 48).  இவர் சேலத்தில் நடைபெறும் உறவினர் திருமண நிகழ்ச்சிக்காக நேற்று மதியம் புறப்பட்டார்.

கோவை ரயில் நிலையத்தில் ஆலபுழா- மத்தியபிரதேசம் செல்லும் பெக்காரோ ரயிலில் புறப்பட்டனர். கைப்பையில் வைத்திருந்த  நெக்லஸ். மோதிரம் மற்றும் தங்க நாணயம் என 5½ பவுன் அதனுடன் மூன்று ஆயிரத்து 500 ரூபாய் வைத்துள்ளார்.

Related image

சேலம் ரயில் நிலையத்தில் இறங்கி துணி வைத்திருந்த பையை பார்த்தபோது  அதில் இருந்த கைப்பையை காணாததால் அதிர்ச்சியடைந்தார்.இதனால்  மர்ம நபர்கள் திருடிச்சென்றிப்பது தெரியவந்தது. இச் சம்பவத்தை  சிவகாமி அவரது கணவருக்கு தகவல் தெரிவித்தார். அவர் கோவை ரயில் நிலைய போலீஸ்சாரிடம் புகார் அளித்தார்.

இந்த புகாரின் பேரில் கோவை ரயில் நிலைய போலீசார் இச் சம்பவம் குறித்து சேலம் ரயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். நகைகளை கொள்ளையடித்த  மர்ம நபர்களை போலீசார் வலை வீசி தேடி வருகிறார்கள்.