தஞ்சாவூர் மாவட்டத்தில் மாத கோட்டை சாலையில் உள்ள பேங்க் ஸ்டாப் காலனி ஏழாவது தெருவில் பாலசுப்பிரமணியன் – வளர்மதி தம்பதியினர் வசித்து வருகின்றனர். பாலசுப்ரமணியன் தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தில் அகராதிகள் துறையில் பேராசிரியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில் பாலசுப்பிரமணியன் கடந்த 14ஆம் தேதி வழக்கம் போல் பணிக்கு சென்றுள்ளார். ஆனால் அன்று மாலை வீட்டிற்கு வரவில்லை. இதனையடுத்து அவருடைய மனைவி வளர்மதி செல்போனில் அவரை தொடர்பு கொண்ட போது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது. அதனை தொடர்ந்து பாலசுப்ரமணியன் மறுநாள் 15 ஆம் தேதி மாலை காயங்களுடன் வீட்டிற்கு வந்துள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது மனைவி என்ன நடந்தது என கேட்டுள்ளார் அதற்கு கல்லூரி முடிந்து வீட்டிற்கு திரும்பிய போது தன்னை யாரோ கடத்தி சென்று தாக்கியதாகவும், தன்னுடைய காரை உடைத்து கார், செல்போன், பர்ஸ் ஆகியவற்றை பறித்து கொண்டு சென்றதாகவும் கூறிவிட்டு அவர் மயங்கியுள்ளார். இதனை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.