ஹோட்டலில் கொலை செய்த மர்மநபர்கள் … பயத்தில் காவல்துறையில் சரண் ..!!

திருத்தணியில் உணவகத்தில் வைத்து இளைஞர் வெட்டிக் கொலை செய்த வழக்கில் 4 பேர்  காவல் துறையினரிடம் சரணடைந்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் பெருமாள்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர்  மகேஷ். இவர் கடந்த வெள்ளிக்கிழமையன்று பட்டா பட்டிகளுடன் வந்த கும்பலினால்  ஓட ஓட விரட்டப்பட்டு பொதுமக்கள் முன்னிலையில் திருத்தணி முருகன் கோவிலின் அடிவாரத்தில்  உள்ள உணவகத்தில் வைத்து வெட்டி கொலை செய்யப்பட்டார் .

Image result for muder

 

பின்னர் கொலையை செய்த மர்ம நபர்கள் அங்கிருந்து  தப்பி ஓடினர் . அதன்பின் காவல் துறையினர் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர் .  இந்நிலையில் மகேஷ்சை வெட்டிக் கொலை செய்த ஜப்பான் என்ற விமல்ராஜ் , அஜித்குமார் , ராஜ்குமார் , கோபிநாத் ஆகிய 4 பேர் திருத்தணி துணை காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் சரணடைந்தனர்.

Related image

அதைத்தொடர்ந்து காவல்துறையினர் அவர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதன்பின் முதற்கட்ட விசாரணையில் முன்விரோதம்  காரணமாக கொலை நடந்து இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு நடைபெற்ற கைப்பந்து போட்டியின் போது இன்பராஜ் மற்றும் விமல்ராஜ் குழுக்கள் இடையே ஏற்பட்ட மோதல் ஏற்பட்டது .

Image result for muder

அதனால் , அடுத்தடுத்த இரண்டு கொலைகள் அரங்கேறி உள்ளன. மேலும், அதன் தொடர்ச்சியாகவே தற்போது மகேஷ் கொல்லப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்நிலையில், சரணடைந்த 4 பேரிடமும் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.