காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே நகைக்கடை உரிமையாளரிடம் மர்மக்கும்பல் தனது கைவரிசையை காட்டியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே இலப்பாக்கத்தை சேர்ந்த பூறாராம் என்பவர் இலப்பாக்கத்தில் நகைக்கடை ஒன்று நடத்தி வருகிறார். இவர் ராமாபுரம் என்ற பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபோது காரில் வந்த 3 பேர் கொண்ட மர்மக்கும்பல் இருசக்கர வாகனத்தின் மீது மோதியுள்ளனர். இதில் தடுமாற்றம் அடைந்து பூறாராம் கீழே விழுந்துள்ளார்.

பின்பு பூறாராமை கத்தியால் லேசாக தாக்கி கழுத்தில் அணிந்திருந்த 3 சவரன் செயின், செல்போன் மற்றும் இருசக்கர வாகனத்தின் சாவி ஆகியவற்றை பறித்துவிட்டு மர்மக்கும்பல் காரில் ஏறி தப்பிச் சென்றன. இச்சம்பவம் அருகே பொருத்தப்பட்ட சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சியைக் கைப்பற்றிய மேல்மருவத்தூர் போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.